மிகவும் சுவையான இனிப்புப் பண்டங்களில் ஒன்றான கேரட் அல்வா செய்வது எப்படியென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:-
கேரட் – 200 கிராம்
சீனி – 500 கிராம்
நெய் – 400 கிராம்
முந்திரிப்பருப்பு – 75 கிராம்
கோதுமை மா – தேவையான அளவு
கொஞ்சம் – வெண்ணிலா எஸன்ஸ்
செய்முறை:-
கேரட்டை மென்மையாகத் துருவி எடுத்துக் கொள்ளவும். துருவிய கேரட்டை கொஞ்சம் பால் சேர்த்து வேக விட வேண்டும். வெந்ததும் நன்கு மசித்து கோதுமை மாவுடன் கரைத்துக் கொள்ளவும். சீனியை பாகுபோல் காய்ச்சி இந்தக் கலவையுடன் கலந்து கைபடாமல் கிளறி விடவும். கலவை சற்று கெட்டியாக வந்தவுடன் நெய் சேர்த்து மறுபடியும் கிளறவும், கேரட் சுருண்டு அல்வா பதத்திற்கு வந்து நெய் கசியத் தொடங்கியதும் அதனுடன் முந்திரிப் பருப்பு, வெண்ணிலா எஸன்ஸ் சில துளிகள் விட்டு இறக்கி வைக்கவும்.சுவையான கேரட் அல்வா தயார்.
நன்றி | வவுனியா நெற்