உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் இரண்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு உக்ரைன் ஆதரவாளர்கள் மத்திய இலண்டன் வழியாக பேரணியாக சென்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹைட் பார்க்கில் உள்ள ஸ்பீக்கர்ஸ் கார்னரில் சனிக்கிழமை திரண்டனர்.
பலர் உக்ரேனியக் கொடிகளால் தங்களை போர்த்தி இருந்ததுடன், சிலர் “போரை நிறுத்துங்கள்” என்று ரஷ்யாவை வலியுறுத்தும் பதாதைகளை வைத்திருந்தனர்.
ஐக்கிய நாடுகளின் அறிக்கையின்படி, கடந்த பெப்ரவரி 2022 ஆரம்பித்த உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால் இதுவரை சுமார் 10,582 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருக்களில் நடந்து சென்றபோது, சிலர் “உக்ரைனுடன் நில்” என்று கூச்சலிட்டதுடன், மற்றும் பெண்கள் பாரம்பரிய உக்ரேனிய மாலைகளை தலையில் அணிந்திருந்தனர்.
“எவ்வளவு காலத்திற்கு நான் உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும், என் கணவரை விட்டுச் செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியாததால் மிகவும் கடினமாக இருந்தது” என, ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போரிடுவதற்காக தனது கணவரை உக்ரைனில் விட்டு இங்கிலாந்துக்கு வந்த நடாலியா ருசின்கோ இதன்போது கூறினார்.