Chemotherapy எனும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற இங்கிலாந்து இளவரசி கேட் மிடல்டன் நீண்ட நாட்களின் பின்னர் பொதுமக்கள் முன் தென்பட்டார்.
மத்திய லண்டனில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் “Trooping the Colour” எனும் இராணுவ அணிவகுப்பில் தம்முடைய 3 பிள்ளைகளுடன் இளவரசி கேட் இவ்வாறு கலந்துகொண்டார்.
இங்கிலாந்து மன்னரின் சடங்குபூர்வ பிறந்தநாளைக் கொண்டாடும் அந்த அணிவகுப்பு நேற்று (15 ஜூன்) நடைபெற்றது. மன்னர் சார்ல்ஸ், ராணி கமிலியா, குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் ஆகியோரும் அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.
குறிப்பாக இளவரசி கேட் மிடல்டன், புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்ற பிறகு முதல் முறையாகப் பொதுமக்களுக்கு முன் தோன்றியிருந்தார்.
5 மாதங்களுக்கு முன் அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதில் தமக்குப் புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அப்போதிலிருந்து இளவரசி பொது நிகழ்வுகளை தவிர்த்து வந்தார். சுகாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதால் பொதுமக்களிடையே தோன்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் முழுமையாகக் குணமாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
வீடியோ மூலம் : BBC