March 24, 2023 3:16 am

பாலுட்டும் தாய்மார் அணியும் உள்ளாடைகளில் கவனிக்க வேண்டியவை பாலுட்டும் தாய்மார் அணியும் உள்ளாடைகளில் கவனிக்க வேண்டியவை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

* பின் பக்கம் 4 ஹீக்குள் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மார்பக கனத்தினை கீழிருந்து தாங்க முடியும்.

* தோள்பட்டை நாடாக்கள் அகன்று இருக்க வேண்டும்.

* பின்புறமும் பக்க வாட்டிலும் அகன்ற மென்மையான பெல்ட் போன்ற பட்டை இருக்க வேண்டும்.

* பருத்தி உள்ளாடை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

* மார்பக அளவில் எளிதால் திறந்து மூடும் அமைப்பு இருக்க வேண்டும்.

மார்பக பாதுகாப்பு:

* மார்பகங்களை நீர் ஊற்றி சுத்தம் செய்து பின்னர் சென்ட் இல்லாத சோப் கொண்டு சுத்தம் செய்து நன்கு கழுவி விட வேண்டும்.

* மார்பக காம்பில் புண், கிருமி வராமலும், மார்பகத்தில் பால் சுரப்பியில் பால் அடைபடாமலும் வைத்துக் கொள்ள வேண்டும். பாதிப்பு ஏற்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம்.

* மற்றும் முறையான `ப்ரா’ அணிய வேண்டும்.

மார்பக அழகு:

அழகு என்பது அவசியம்தான். ஆனால் இந்த நினைப்பே ஒருவர் வாழ்வை அழிக்கும் அளவு ஆபத்தாகி விடக்கூடாது. அநேக பெண்களுக்கு தாய்பால் கொடுத்தால் மார்பக அழகு கெட்டுவிடும் என்ற பயம் மிக அதிகமாக உள்ளது. ஒரு பெண்ணின் மார்பக மாறுதல் அவரது கர்ப்பகாலத்திலேயே ஏற்படும்.

ஒருவர் போல் அடுத்தவருக்கு இராது. ஆகவே உங்களை மற்றவரோடு ஒப்பிடாதீர்கள். கருவுற்ற 16 வாரங்களுக்கும் பிறகு ஒருவரது மார்பக காம்பும் அதைச் சுற்றியும் கறு நிறம் கூடும். மார்பகத்தில் இரத்த நாளங்களின் அடையாளம் தெரியும்.

பிரசவம் நெருக்கும் போது வெளிர் மஞ்ச திரவம் காம்பு வழி வடியும். இதனை `கொலட்ரம்` எனப்படும். கர்ப்ப காலத்தில் மார்பக விரிவுக்கேற்ற தரமான உள்ளாடை அணியவேண்டும். மார்பக சருமம் வறண்டு விடாமல் இருக்க `வைட்டமின் சி’ சத்து நிறைந்த உணவினைக் கொள்ள வேண்டும்.

தாய்பால் கொடுக்கும் காலத்தில் காம்புகளின் புண் ஏற்படாது பாதுகாக்க வேண்டும். தாய்பால் கொடுத்தபிறகு மார்பகத்தில் ஏதாவது கட்டி போல் தடித்து இருக்கின்றதா என்று பாருங்கள். இருந்தால் மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

பால் நிரம்பி மார்பகம் கனத்தால் சிறிது மென்மையாக அழுத்தி பழைய பாலினை வெளியேற்றி விடுங்கள். மார்பகத்தினை பழைய நிலைக்கு கொண்டு வர விஞ்ஞான ரீதியாக எந்த க்ரீம்களும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.

ஆனால் சிலவகை உடற்பயிற்சிகள் மார்பகம் சீர் செய்ய உதவுகின்றன. சிலருக்கு குழந்தையை இறக்கும் வேதனையான நிகழ்வு ஏற்படலாம். அப்பொழுது மார்பக பாலினை நிறுத்த மருந்துகள் மருத்துவரால் கொடுக்கப்படுவதுண்டு.

தாய்மை பெண்ணுக்கு இறைவன் கொடுத்த உயர்ந்த நிலை. தாய்பால் இறைவன் குழந்தைக்குக் கொடுத்த அமிர்தம். இதில் உண்மையாய், முழு ஈடுபாட்டோடு செயல்பட்டு ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்குவோம்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்