April 1, 2023 6:50 pm

ஷ் ஷ் ……..பெண்களுக்கு – ஆண்களை பற்றிஷ் ஷ் ……..பெண்களுக்கு – ஆண்களை பற்றி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது. ஆனால் எல்லாம் தெரிந்தது போல் நடந்து கொள்வார்கள்.

1. ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவும் பிடிக்கும். சமையலறை பெண்களுக்குத் தான் என்று சொல்வது உண்மைதான். அப்படி சமைக்கும் பெண்களை விட, தனியாக வீடு எடுத்து தங்கி, சமைத்து உண்ணும் ஆண்களின் சமையல் உண்மையில் மிகவும் சுவையாக இருக்கும்.

2.  ஆண்கள் அனைவரும் ‘பெண்கள் உணர்ச்சி வசப்பட்டால் அழுவார்கள்’ என்று சொல்கின்றனர். உண்மையில் ஆண்களே உணர்ச்சிவயப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் அதனை வெளிப்படுத்தமாட்டார்கள். பெண்கள் ஏதேனும் ஒரு கஷ்டம் என்றால் அழுது வெளிப்படுத்துவர். ஆனால் ஆண்கள் அதனை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். ஏனெனில் ஆண்களிடம் இருக்கும் ஈகோ அதனை கட்டுப்படுத்தும்.

3. அடிக்கடி ஆண்கள் பெண்களை அதிகம் துன்புறுத்துவார்கள். ஆனால் அதில் ஒரு காரணம் இருக்கும். அதிலும் அவர்கள் உடுத்தும் உடை, கூந்தல் அழகு, ஹை ஹீல்ஸ் அல்லது பேசும் விதம் போன்றவற்றை வைத்து துன்புறுத்துவதில் மிகவும் பிஸியாக இருப்பர். ஏனெனில் ஆண்கள் அவ்வாறு செய்தால் அது அவர்களது ஒரு வகையான அன்பை வெளிப்படுத்தும் விதம் ஆகும். ஆனால் அவ்வாறு செய்வது ஒரு அன்பின் காரணமாக என்று நிறைய பெண்களுக்கு தெரியாது.

4. ஆண்களுக்கு வாயாடுவது என்பது பிடிக்காது என்று நிறைய பெண்கள் நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் பிடிக்கும். அவ்வளவாக வாயாடவில்லை என்றால்கூட ஓரளவாவது வாயாடுவர். அதிலும் அவர்கள் பெரும்பாலும் வாயாடுவது எதைப்பற்றி என்று கூறினால், பெண்களைப் பற்றி தான் இருக்கும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்