Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் கர்ப்பத்திற்கு பிறகு எளிய உடற்பயிற்சிகள் !! பெண்களுக்கான பதிவு !!கர்ப்பத்திற்கு பிறகு எளிய உடற்பயிற்சிகள் !! பெண்களுக்கான பதிவு !!

கர்ப்பத்திற்கு பிறகு எளிய உடற்பயிற்சிகள் !! பெண்களுக்கான பதிவு !!கர்ப்பத்திற்கு பிறகு எளிய உடற்பயிற்சிகள் !! பெண்களுக்கான பதிவு !!

2 minutes read

பத்து மாதங்கள் குழந்தையை கருவில் சுமக்கும் போது பத்திரமாக பார்த்துக்கொண்ட தாய்மார்கள், குழந்தை பிறந்த பிறகு குழந்தையின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல தங்களின் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு தாயும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறார். எனவே பிரசவம் முடிந்த பிறகு உணவு மற்றும் உடற்பயிற்சியில் அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். சாதாரணமாக தேவைப்படும் கலோரிகளை விட அதிகமாக 500 கலோரிகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த அளவு ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற்ப மாறுபடும். வேலை செய்யாதவர்களுக்கு தினசரி கலோரி 1800 என்றால் வேலை செய்பவர்களுக்கு 2000 கலோரிகள் தேவையாக இருக்கும்.

பொதுவாக சுகப்பிரசவமோ அல்லது சிசேரியனோ, ரத்த இழப்பு அதிகமாக இருக்கும். அதை அவர்கள் கண்டிப்பாக ஈடு செய்ய வேண்டும். அதற்கு கீரைகள், பேரிச்சை, கேழ்வரகு, கம்பு, கறிவேப்பிலை பொடி போன்றவற்றை உணவில் சேசர்த்துக்கொள்ள வேண்டும். அதாவது தினமும் ஒரு கீரை அவசியம். குழந்தைகள் ஒட்டுண்ணிகள். எனவே தாய்மார்கள் சரியாக சாப்பிட்டால் தான் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும். அதற்காக கண்ணில் தென்படுவதை எல்லாம் சாப்பிடக்கூடாது.

கொழுப்புசத்துள்ள உணவுகளை தவிர்த்து புரதசத்து, நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம், மற்றும் இதர சத்துள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைக்கு பால் புகட்டுவதால் கால்சியம் மற்றும் புரதசத்து, அதிகமாக தேவைப்படும். பால், பால் சார்ந்த பொருட்கள், மீன், நண்டு, இறால், சோளம், போன்றவற்றில் அதிக கால்சிய சத்துள்ளது. தினமும் குறைந்த பட்சம் இரண்டு டம்ளர் பால் குடிப்பது அவசியம். பாதாம், பிஸ்தா, அக்ரூட், பச்சை வேர்க்கடலை, மீன், முட்டையில் புரதசத்துகள் உள்ளன. இவை பால் சுரக்கவும் உதவக்கூடியவை.

தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இது மலச்சிக்கல் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும். பால் புகட்டும் முன் ஒரு சொம்பு நிறைய தண்ணீர் குடித்துவிட்டு பால் புகட்டலாம். இதனால் பால் நன்றாக சுரக்கும். கர்ப்ப காலத்தில் கருவில் குழந்தை இருப்பதால், வயிறு நன்றாக விரிந்திருக்கும். குழந்தை பிறந்த பிறகு அவை மெது வாக சுருங்கும். இந்த சமயத்தில் அதிக கொழுப்பு சத் துள்ள உணவுகள், கிழங்கு வகைகள், மற்றும் தேங்காய், போன்ற உணவுகளை சாப்பிட்டால் வாயு, மலச்சிக்கல், அஜீரண கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

எனவே பிரசவத்துக்கு பிறகு ஒரு மாத காலம் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அஜீரணத்தை தவிர்க்க இஞ்சி, பூண்டு, மிளகு, போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடலாம். வேப்பிலை பொடி, சுண்டைக்காய் பொடி மற்றும் நார்த்த இலையை பொடி செய்து தயிர் சாதத்துடன் சாப்பிடலாம். இது அஜீரண பிரச்னைக்கு நல்ல மருந்து. சில பெண்கள் பால் சுரக்காமல் அவதிபடுவார்கள். அவர்கள் சுறாபுட்டுடன் சோம்பு கீரை சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

இப்படி ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது போலவே சின்னச்சின்ன உடற்பயிற்சிகள், வீட்டு வேலைகள் செய்யலாம். அறுவை சிகிச்சை என்றால் மூன்று மாதம் கழித்து உடற்பயிற்சிகளை டாக்டரின் ஆலோசனையுடன் செய்யலாம்.

எளிய உடற்பயிற்சிகள்

மல்லாந்து படுத்துக்கொண்டு முதலில் வலது காலை மட்டும் மேலே உயர்த்த வேண்டும். பிறகு இடது காலை மேலே உயர்த்த வேண்டும். அதன் பிறகு இரண்டு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். இது போல் தினமும் பத்து முறை செய்யலாம். வயிறு உப்புசம் குறையும். நின்றுக் கொண்டு இரண்டு கை விரல்களும் கால் விரல்களும் தொடும் அளவு குனிய வேண்டும். பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுவது போல் பத்து முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும்.

இடுப்பு பகுதிக்கு இது நல்ல பயிற்சி. மேசை மேல் அமர்ந்து வேலை செய்யாமல் கீழே உட்கார்ந்து வேலை செய்யும் போது அது பெல்விக் மற்றும் கர்ப்பப்பையை வலுப்படுத்தும். அதாவது கீழே அமர்ந்து சாப்பிடலாம், காய்கறி நறுக்கலாம், இது போன்ற வேலைகளை கீழே அமர்ந்து செய்யலாம். நேரம் இருந்தால் குழந்தை பிறந்து ஐந்து மாதம் கழித்து நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

 

 

 

நன்றி : கரைச் செல்வன் | இன்று ஒரு தகவல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More