March 20, 2023 10:03 pm

முகப்பருக்களை கட்டுப்படுத்துவது எப்படி?முகப்பருக்களை கட்டுப்படுத்துவது எப்படி?

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஹார்மோன் சுரப்பு, எண்ணெய் பசை அதிகரிப்பு, கிருமி தொற்று போன்றவை முகப்பருக்கள் ஏற்பட காரணமாகின்றன. முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் முகத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. இந்த சுரப்பிகள் தூசு, அழுக்கு போன்றவற்றால் அடைபடும் போது கிருமி தொற்று ஏற்பட்டு முகப்பருக்கள் ஏற்படுகின்றன. இந்த பருக்களில் சீழ்போன்ற திரவம் நிறைந்து கரும்புள்ளிகளையும் உருவாக்கும். இந்த சீழில் உள்ள கிருமிகள் பரவி மேலும் முகப்பருக்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

எனவே முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதிக எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் அவ்வப்போது முகத்தை சோப்பு மற்றும் நீரால் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முகப்பருக்களை அடிக்கடி கையால் தொட்டுப் பார்க்க கூடாது. நகத்தால் கிள்ளவும் கூடாது. இதனால் கிருமித்தொற்று பரவி அடுத்தடுத்து புதிய முகப்பருக்கள் ஏற்படும். வேப்பிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.

நிறைய குடிக்கவேண்டும். பச்சை காய்கறிகள், பழங்கள் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். மலச்சிக்கலை கட்டுப்படுத்த வேண்டும். தலையணை உறை, சோப்பு, டவல் போன்றவற்றை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வைத்து பயன்படுத்தவும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் வியர்வை மூலம் தோலின் நுண்துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சருமம் சுத்தமாகும். பவுடர், அழகுசாதன பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இவற்றால் எண்ணெய் சுரப்பிகள் அடைபடும் நிலை ஏற்படும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்