March 20, 2023 10:40 pm

பெண்களே! பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?பெண்களே! பட்டுப் போன்ற மேனிக்காக ஏக்கமா?

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சில பெண்களுக்கு எத்தனை வயசானாலும் தோல் சுருங்காது.வழவழவெனச் சின்னப் பெண்ணைப் போலவே இருக்கும்! தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின்மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா? அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கணும்பா » – இப்படி ஏக்கப் பெருமூச்சு விடுகிறீர்களா?

அம்மணி…. பொறுங்கள். இதைப் படியுங்கள் முதலில்!

தண்ணீர் மருந்து

தண்ணி கிடைக்காத காலத்துல மருந்து மாதிரிதான் தண்ணியைக் குடிக்க வேண்டியிருக்கு » – நீங்கள் முனகுவது காதில் விழுகிறது. ஆனால், ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு வயிற்றுப் பிரச்சினை அவ்வளவாக வருவதில்லை! வயிறு நலமாக இருந்தால், நமது உடம்பின் சருமமும் சுத்தமாக இருக்கும்.

எலுமிச்சை உடம்புக்கு நல்லது

குளிப்பதற்கு முன் – ஒரு வாளித் தண்ணீரில் ஒரு மூடி எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளுங்கள். சோப்பு தேய்த்துக் குளித்த பின், கடைசியாக ஒரு ‘லெமன் பாத்’ எடுங்கள்.

இதன் புத்துணர்வையும் சரும மினு மினுப்பையும் அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

நாட்டுமருந்துக் கடைகளில் கார்போக அரிசி என்று கேட்டால் தருவார்கள். இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் சலித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு பேஸ்ட் மாதிரி செய்து தோலில் தடவுங்கள். விரைவில் தேமல் இருந்த இடம் தெரியாமல் போகும்!

மெருகுக்கு பப்பாளி

நன்கு பழுத்த பப்பாளியை நறுக்கி, மிக்ஸியில் போட்டு அடித்து, அத்துடன் ஒரு மூடி எலுமிச்சை சாறை விட்டுக் கலந்து, உடம்பில் தேய்த்து, ஒரு மணி நேரம் போல ஊறியபின் குளிக்கலாம்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்