மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்க அதிநவீன வயர்லெஸ் கருவியை, அமெரிக்க ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்துள்ளது. இது இந்தியா மற்றும் அமெரிக்காவில் கூடிய விரைவில் மார்பகப் புற்றுநோய் சோதனைக்கு பயன்படுத்தப்படும். இந்தக் கருவி கையடக்மானது, மருத்துவரால் எளிதில் ஐந்து நிமிடத்தில் பிரச்னையைக் கண்டுபிடித்து பரிசோதனை முடிவை ஸ்மார்ட் போனில் அல்லது டாப்லெட்டில் வெளியிட முடியும்.
அமெரிக்க வர்த்தகத் துறை செயலாளர் பென்னி பிரிட்செகர் கொலம்பியா பல்கலைக்கழத்தில் இது குறித்து பேசுகையில், இக்கருவியும் மூலம் மார்பகப் புற்றுநோயைத் துல்லியமாக கண்டறியலாம், எந்தவித பக்கவிளைவுகளும் இருக்காது. மார்பக புற்றுநோயை கண்டறியும் கருவியை மிகவும் நவீனமயமாக கண்டுபிடிக்க எங்கள் குழுவினர் மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இக்கருவியில் எடை குறைவு. ஸ்மார்ட் ஃபோன் தொழில்நுட்பத்துடன் இணைந்த பல துல்லியமான தகவல்களை தரும் வகையில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது இது.
மேலும் இந்த கருவியில் பல நவீன பயன்கள் உள்ளன. இதில் உள்ள சென்சார் மூலம் எந்த பாதிப்பும் செல்களுக்கு ஏற்படாது. சோதனை செய்தபின், உடனுக்குடன் துல்லியமான தகவல்கள் கிடைக்கும். எந்த செல்லில் பாதிப்பு என்பதை சொல்லி விடும். ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் இந்த கருவியை இணைத்து விட்டால் போதும், சோதனை முடிந்த ஐந்து நிமிடங்களில் ரிசல்ட் கிடைத்து விடும்’ என்றார் பென்னி.
இந்தக்கருவி அமெரிக்காவிலும் இந்தியாவிலும் அடுத்த மாதம் முதல் மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும்.