2
கற்றாழை கடவுள் நமக்கு கொடுத்த ஒரு அருமையான மருத்துவ குணம் கொண்ட பொருள். இத்தகைய கற்றாழையானது உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் மருத்துவ குணத்தைக் கொண்டிருப்பதோடு, பல்வேறு அழகு நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. மேலும் கற்றாழை ஜெல்லானது குளிர்ந்த தன்மையைக் கொண்டிருப்பதால், அது சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளை விரைவில் போக்கிவிடும்.
ஆனால் கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவதை விட, இயற்கையாக செடிகளை பிய்த்து அதன் ஜெல்லைப்பயன்படுத்தினால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும். இப்போது கற்றாழை ஜெல்லை அழகுப் பராமரிப்பில் பயன்படுத்தினால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.
சருமத்தின் கருமையை போக்கும்
வெயிலில் அதிகம் சுற்றி திரியும் போது, சருமமானது கருமை நிறமடையும். எனவே அத்தகைய கருமையை போக்க, தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவி மசாஜ் செய்து பாருங்கள். இதன் பலன் நன்கு தெரியும்.
முதுமை தோற்றத்தை தடுக்கும்
தற்போதுள்ளமன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால், நிறைய பேருக்கு இளம் வயதிலேயே சரும சுருக்கம் ஏற்பட்டு, முதுமை தோற்றத்தை அடைகின்றனர். எனவே இன்றைய இளம் வயதினர் தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்திற்கு பயன்படுத்தினால், இத்தகைய பிரச்சனையைத் தடுக்கலாம்.
பருக்கள்
பருக்கள் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் அதிகம். அத்தகையவர்கள் கற்றாழையின் ஜெல்லை சருமத்திற்கு தடவி வந்தால், அதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள், முகப்பருவை போக்கிவிடும்.
நகப் பராமரிப்பு
நகங்கள் அடிக்கடி உடைக்கிறதா?
அப்படியானால் கற்றாழை ஜெல்லை நகங்களுக்கு தடவி மசாஜ் செய்து வந்தால், நகங்கள் வலிமையடையும்.
பொலிவான சருமம்
சருமத்தின் பொலிவை அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் கற்றாழை ஜெல்லைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்யுங்கள்.
உதடு வறட்சியை தடுக்கும்
கற்றாழையின் அழகு நன்மைகளில் ஒன்று தான் உதடு வறட்சியைத் தடுப்பது. உதடுகள் வறட்சியடைந்து, உதட்டின் அழகே கெடுகிறதா? அப்படியானால் இரவில் படுக்கும்போது கற்றாழை ஜெல்லை உதடுகளில் தடவி வாருங்கள். இல்லாவிட்டால், கற்றாழை ஜெல்லை ஆலிவ் ஆயிலில் சேர்த்து கலந்து, பகல் நேரத்தில் லிப் பாம் போன்றும் பயன்படுத்தலாம்.
அழகான கண்கள்
கண்களில் உள்ள கருவளையம் மற்றும் வீக்கத்தை போக்கி, அழகான கண்கள் வேண்டுமானால், தினமும் கற்றாழை ஜெல்லை கண்களுக்கு தடவி வாருங்கள் இதனால் நல்ல மாற்றம் தெரியும்.
நன்றி boldsky