Thursday, December 3, 2020

இதையும் படிங்க

தலைமுடி உதிர்வை தடுக்கும் உணவுவகைகள் என்ன..

நம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். 

இளநரை உள்ளவர்களுக்கு அதிர்ச்சி தகவல் | ஆய்வில் எச்சரிக்கை!

இளநரை சகஜம்தானே என அசால்டாக இருந்தவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆய்வு முடிவுகள் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், இதய பாதிப்புகளின் அறிகுறிப் பட்டியலில் இளவயதில்...

35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்

முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார...

மழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம்...

கண்களுக்கு மஸ்காரா தீட்டுவது எப்படி தெரியுமா?

கண் இமை முடிகளுக்கான மஸ்காரா வாங்குவதில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு முடிவுக்கு வருவதற்கு முன், கண் இமை முடிகளுக்கான மஸ்காரா குறித்து நன்கு அறிந்து கொள்ளுங்கள். குறுகிய...

செயற்கை நகைகள் பெண்களுக்கு ஏற்படுத்தும் ‘அலர்ஜி

அழகான, விதவிதமான டிசைன்களை கொண்ட நகைகளை அணிந்து அழகு பார்ப்பதற்கு பெண்கள் ஆசைப்படுவார்கள். எல்லாவிதமான நகைகளும் எல்லோருடைய சருமத்திற்கும் ஒத்துக்கொள்ளாது. குறிப்பாக செயற்கை நகைகள் பலருடைய சருமத்திற்கு பொருந்தாது.

ஆசிரியர்

கர்ப்பிணிக்கு உண்டாகும் வாயு பிரச்சனையை தீர்க்கும் எளிமையான வீட்டு வைத்தியம்!

கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் பிரச்சனைகளில் வாயு பிரச்சனையும் ஒன்று. கர்ப்பகாலத்தில் உடல் பல மாற்றங்களை சந்திக்கிறது. கர்ப்ப காலத்தில் உடலில் புரெஜெஸ்டிரான் என்னும் ஹார்மோன் சுரப்பதால் அவை வாயுவை உண்டாக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாகிறது. புரொஜெஸ்டிரான் என்னும் ஹார்மோன் உடல் தசைகளை தளர்த்த கூடியது. இது குடலின் தசைகளை மெதுவாக இயக்கி செரிமானத்தை தாமதமாக்கும் போது வாயுவை உண்டாக்குகிறது.

மேலும் கர்ப்பத்தின் போது கர்ப்பப்பை அழுத்தத்தாலும் செரிமானம் குறைந்து அதிக வாயுவை உண்டாக்குகிறது. மேலும் உணவுகளும் கூட சமயங்களில் வாயுவை உண்டாக்கிவிடுகிறது. வாயுவை அலட்சியம் செய்யும் போது அது மலச்சிக்கலை உண்டாக்கிவிடக்கூடும் என்பதால் அதை தவிர்ப்பது நல்லது. ஆனால் இதற்கு சிறந்த வீட்டு வைத்தியங்களும் உண்டு. எப்படி வாயுவை தவிர்ப்பது அல்லது குணப்படுத்துவது என்று பார்க்கலாம்.

​திரவ ஆகாரங்கள்

கர்ப்பகாலத்தில் உடலில் நீரிழிப்பு இல்லாமல் பார்த்துகொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். உடலில் போதுமான நீர்ச்சத்து இருக்க அதிக அளவு நீர்குடிப்பதால் கிடைக்கும் நன்மையில் வாயு நீக்கும் மருத்துவமும் ஒன்று.தினமும் 8 முதல் 12 டம்ளர் வரை நீர் குடிப்பதை பின்பற்றுங்கள். தாகம் இல்லையென்று. அல்லது தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும் என்று தவிர்க்காமல் போதுமான நீர் அவசியம்.

நீரோடு பழச்சாறுகளும் எடுத்துகொள்ளலாம். அதே நேரம் எடுத்துகொள்ளும் பழச்சாறுகள் வாயு வீக்கத்தை உண்டாக்கமால் இருக்க வேண்டும். இல்லையெனில் இவை தீவிர பாதிப்பை உண்டாக்கி இரிடபிள் டவுண்ட் சிண்ட்ரோம். (irritable bowel syndrome (IBS)) உண்டாக்கிவிடும்.

பழச்சாறுகளில் ஆரஞ்சு, குருதி நெல்லி சாறுகள் உதவும். இவை செரிமானத்தை எளிதாக்க கூடியவை.

குறிப்பு: திரவ ஆகாரங்கள் என்று கார்பன் டை ஆக்ஸைடு பானங்கள் எடுத்துகொள்வது வாயுவை அதிகரிக்க கூடும்.

​நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

வாயுவை அதிகரிக்கும் உணவுகள் மிக விரைவாக மலச்சிக்கலை உண்டாக்கிவிடவும் செய்யும். அதே நேரம் வாயுவை தவிர்க்கும் உணவுகள் மலச்சிக்கலை கட்டுப்படுத்தவும் செய்யும். கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு மலச்சிக்கல் பொதுவானது என்றாலும் இதை உணவு முறை, வாழ்க்கை முறையால் கட்டுப்படுத்திவிட முடியும்.

நார்ச்சத்து மிகுந்த உணவுகள் குடல் இயக்கத்துக்கு உதவும். இவை போதுமான நீரை குடலுக்குள் கொண்டு வர உதவுகிறது. மலத்தை மென்மையாக்கி எளிதாக வெளியேற உதவுகிறது. கர்ப்பிணி தினமும் 25 முதல் 30 கிராம் வரையான நார்ச்சத்து நிறைந்த உணவை சேர்ப்பது அவசியம். உணவில் முழு தானியங்கள், பழங்கள் ( வாழைப்பழம், அத்திப்பழம், கொடி முந்திரி,ஆப்பிள்) காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும்.

​உடல் உழைப்புக்கு மாறுங்கள்

கர்ப்பகாலம் என்பது ஓய்வுக்காலமாக பல கர்ப்பிணிகள் நினைக்கிறார்கள். ஆனால் உடலுக்கு கடுமையான உழைப்பை தரகூடாது. கர்ப்பிணி பெண்கள் வழக்கமான வேலைசெய்யலாம். உடற்பயிற்சியை அன்றாட பணிகளில் ஒன்றாக மேற்கொள்லலாம். ஜிம்மிற்கு சென்று உடல் பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. சாதாரணமான எளிமையான நடைபயிற்சி கூட போதுமானது.

தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்தாலே போதுமானது. இது உடல் ஆரோக்கியத்தையும் மனதை இலகுவாகவும் வைத்திருக்கும். கூடுதலாக மலச்சிக்கல் இல்லாமல் வைத்திருக்க உதவும். செரிமான பிரச்சனைகளை கட்டுப்படுத்தும். உடல் பயிற்சி செய்ய வேண்டும் என்று சுயமாக செய்யாமல் கர்ப்பிணி பெண் தன்னுடைய உடல் ஆரோக்கியம் பொறுத்து மருத்துவரின் ஆலோசனையோடு தகுந்த உடற்பயிற்சிகளை மட்டுமே செய்ய வேண்டும். அணியும் ஆடைவகைகளும் இறுக்கமாக இருக்ககூடாது. அழுத்தமான வயிற்றை இறுக்கும் ஆடைகள் வாயுவை அதிகரிக்கும்.

​வாயு உணவை தவிர்க்க வேண்டும்

உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துகொள்வதால் எல்லா வகையான உணவையும் சேர்க்கலாம் என்று நினைக்க வேண்டாம். வாயு அறிகுறிகளை உணரும் போது அல்லது அதற்கு முன்பு உணவு குறித்தும் அக்கறை கொள்ள வேண்டும். இதனால் வாயு பிரச்சனையும், மலச்சிக்கலும் இல்லாமல் போகலாம்.

வாயுவை உண்டாக்கும் முட்டைகோஸ், ப்ரக்கோலி, கோதுமை மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை வாயுவை அதிகரிக்கும் உணவுகள் என்பதால் அளவாக எடுத்துகொள்ளலாம். கர்ப்பகாலத்தில் சில பெண்கள் ஐபிஎஸ் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். அதனால் வாயுவால் அவதிப்படும் பெண்கள் அறிகுறிகள் தெரியும் போதே தவிர்க்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

ஆழமான மூச்சு அவசியம்

மூச்சுக்கும் வாயுவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். வயிறு வீக்கம், வாயு வீக்கம் போன்றவற்றை வயிற்றுக்குள் செல்லும் காற்று அதிகரித்துவிடக்கூடும். மூச்சை கவனித்து ஆழமாக விடும் பயிற்சி உண்மையில் வாயுவுக்கும் நன்மை செய்யும். மேலும் ஆழமான மூச்சு மனதுக்குள் அமைதியை உண்டு செய்யும். கர்ப்பிணிகள் கவலை கொள்ள கூடாது. மனதை அமைதியாக வைத்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள்.முடிந்தவரை மன அழுத்தம் இல்லாமல் மனதை அமைதியாக வைத்துகொள்வது கூட இதை அதிகரிக்காமல் பாதுகாக்கும்.

​தீவிரமாகும் போது

வாயு பிரச்சனை இருக்கும் போது அதை சாதாரணமாக நினைக்க கூடாது. அவை மேலும் தீவிரமாகாமல் இருக்க உணவுபழக்கத்தையும், வாழ்க்கைமுறையையும் கடைபிடிக்க வேண்டும். ஒரு நாளில் அடிக்கடி வாயு வெளியேறுவதும் தொடர்ந்து 30 நிமிடங்களுக்கு மேல் கடுமையான வயிறு வலி இருந்தால் அது ஒருவாரத்துக்கு மேலாக கடுமையான வயிறுவலியும் கூடவே மலச்சிக்கலும் இருந்தால் அது தவிர்க்கப்பட வேண்டியதல்ல. உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கர்ப்பகாலம் முழுவதும் உணவு மற்றும் வாழ்க்கை முறையில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

நன்றி : தமிழ் சமயம்

இதையும் படிங்க

முகத்தில் உள்ள இறந்த செல்களை, அழுக்குகள் நீங்க இப்படி கழுவுங்க

முகமானது அழகாக இருக்க, அடிக்கடி முகத்தை கழுவுவோம். ஆனால் அவ்வாறு முகத்தை கழுவும் போது எத்தனை பேர் சரியாக கழுவுகிறோம்? மேலும் சிலர் முகத்தில் இருக்கும் அழுக்குகள் போக வேண்டும்...

தாய்ப்பால் – இயற்கையின் கொடை !

“தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் அழகு கெட்டு விடும்! தாய்ப்பாலை விட டின்களில் அடைக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் புட்டிப்பால், பவுடர் பால் உள்ளிட்ட குழந்தை...

கர்ப்பிணிப் பெண்கள் காபி குடிப்பதால் குழந்தைக்கு சிக்கலா?

கர்ப்பிணிப் பெண்கள் காபி குடிக்கலாமா? அது உடலுக்கு நல்லதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம். அதற்கு பதில் தருகிறது இக்கட்டுரை. கர்ப்பிணிப்...

முகம் மற்றும் சரும பராமரிப்பிற்கு வீட்டிற்குள்ளேயே செய்யக்கூடிய எளிய குறிப்புகள்

சூரியகதிர்களின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நம் தோலிலுள்ள மெலனின் நிறமி சுரப்பிகளை அதிகமாக சுரபிப்பதால் தோலின் நிறம் மாறுபடுகிறது.உடலில் உஷ்ணம் அதிகரிப்பதால் தோலிலுள்ள வியர்வைகோள துளைகள் விரிவடைந்து இருப்பதால் பருக்கள்,...

பெண்களை கூடுதல் அழகாக்குவது மூக்குத்தி

பெண்களை கூடுதல் அழகாக்குவது மூக்குத்தி’ என்பது அனைவரின் கருத்தாகவும் இருக்கிறது. பெண்களின் முகத்தில் லேசான குறைபாடுகள் இருந்தாலும் அதை மறைத்து கூடுதல் ஈர்ப்பு சக்தியை தருவது மூக்குத்தியின் சிறப்பாகும். நெற்றிக்கு...

கருவளையத்தைப் போக்கும் 5 கண் மாஸ்க்குகள்!

கணினி, மொபைல், தொலைக்காட்சியை அதிகமாக பார்ப்பதால் கண்ணில் சோர்வு, கருவளையங்கள் உருவாகிறது. உங்கள் கண்கள் பிரகாசிக்க உதவும் 5 இயற்கை கண் மாஸ்க்குகளை...

தொடர்புச் செய்திகள்

கர்ப்பிணி மனைவி அமர கதிரையாக மாறிய கணவன்..

கர்ப்பிணி மனைவி அமர, தன்னையே நாற்காலியாக மாற்றிய கணவனின் செயல், காண்போரை நெகிழ வைத்துள்ளது.. சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹெகாங் என்ற நகரத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு, கர்ப்பிணியான தனது மனைவியை...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தமிழ் சினிமாவின் பெருமிதங்கள்!

இந்திய சினிமா என்றால், அது இந்தி சினிமா என்றே உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆங்கிலத்தில் இந்திப் படங்களைப் பற்றித்தான் ஏராளமான கட்டுரைகளும் புத்தகங்களும் வெளிவந்துள்ளன என்பது அதற்கான முக்கியக் காரணங்களில்...

பாசிப்பருப்பு பாயாசம் | செய்முறை

உங்கள் சுவையை தூண்டும் பாசிப்பருப்பு பாயாசம் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பாசிப்பருப்பு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

கன்னியருக்கு மனம்போல் மாங்கல்யம் அமைய வேண்டுமா?

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நாதந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:கோதா ஸ்துதி பொதுப்பொருள்:

இலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல்- கடுங்காற்று மற்றும் மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிப்பு

இலங்கையைக் கடந்துச் சென்ற புரவி புயல் காரணமாக நாட்டிற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் எதிர்வரும் சில...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 03.12.2020

மேஷம்மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்களின் நட்புகிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு...

தலைவலியா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!

தலைவலிக்கும் நேரத்தில் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அப்படி தலைவலி இருக்கும்போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே பார்ப்போம்.

நேசம் | கவிதை

நீ உனக்காக அழுகிறாய்என்றால் யாரையோநேசிக்கிறாய்என்று அர்த்தம்...! நீ மற்றவர்களுக்காக அழுகிறாய்என்றால் யாரோஉன்னை நேசிக்கிறார்கள்என்று அர்த்தம்...!

பெருமழையின் அச்சுறுத்தலின் மத்தியிலும் கிளிநொச்சியில் மரம் நடுகை

கிளி மக்கள் அமைப்பின் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்கள் நடும் தொடர் செயற்திட்டத்தின் கீழ் இன்று முரசுமோட்டை பகுதியில் ஒரு தொகுதி தேக்குமரங்கள் நடும்...

துயர் பகிர்வு