செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மகளிர் மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு | பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!

மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு | பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!

5 minutes read

உடல், மன ஆரோக்கியம் அனைவருக் கும் அவசியம். ஆனால், வீடு, வேலை என றெக்கை கட்டிப் பறந்துகொண்டிருக்கும் பல பெண்களுக்கும், தங்கள் உடல், மன ஆரோக்கியத்துக்கு அரை மணி நேரம்கூட செலவழிக்க முடிவதில்லை. அப்படிப் பட்டவர்களுக்கானவைதான் முத்திரைகள்.பெண்களுக்கு வரக்கூடிய பிரச்னைகளுக் கான பிரத்யேக முத்திரைகளை எப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லித் தருகிறார் யோகக்கலை நிபுணர் பெ.கிருஷ்ணன் பாலாஜி.

கிருஷ்ணன் பாலாஜி.
கிருஷ்ணன் பாலாஜி.

‘`நம் உடலானது பல கோடி செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லுக்கும் பஞ்சபூத தன்மை இருக்கிறது. நம் விரல் நுனிகள் பஞ்சபூதங்களைக் கட்டுப்படுத்துகின்றன. பெருவிரல் நெருப்பையும், சுண்டு விரல் நீரையும், மோதிர விரல் நிலத்தையும், நடுவிரல் ஆகாயத்தையும், ஆள்காட்டி விரல் காற்றையும் கட்டுப்படுத்துகின்றன. விரல் நுனிகளை இணைக்கும்போது பஞ்சபூதங்கள் இணைந்து, உடலில் ஏற்பட்ட மாறுபாடு களைச் சரி செய்து, உடல் உள்ளுறுப்புகளையும் பலமாக்குகின்றன. சாப்பிடுவதற்கு முன்னால், தினமும் மூன்று வேளைகள் முத்திரை பயிற்சிகளைச் செய்ய வேண்டும். மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை செய்ய வேண்டும். காலை மற்றும் மதியம் கிழக்கு நோக்கி அமர்ந்தும், மாலையில் மேற்கு நோக்கி அமர்ந்தும் செய்ய வேண்டும். தரை விரிப்பின்மீது சப்பணமிட்டு அமர்ந்துதான் முத்திரைகள் செய்ய வேண்டும். தரையில் அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்தும் செய்யலாம். உட்காரும்போது முது கெலும்பு நேராக இருக்க வேண்டும். முத்திரை செய்வதற்கு முன் 20 நொடிகள் இயல்பான மூச்சோட்டத்தில் உட்கார்ந்திருக்க வேண்டும்” என்கிறார்.

மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு... பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!

குழந்தைப்பேற்றுக்கு ஆதி முத்திரை

குழந்தைப்பேறு என்பது உடலும் மனமும் சார்ந்த விஷயம். இரண்டும் சாந்த மாக இருந்தால்தான் சுரப்பிகள் நன்றாக இயங்கும். டென்ஷனும் டிப்ரெஷனும் கர்ப்பப்பையில் பிராண ஆற்றலைக் குறைக்கும். இதைச் சரிசெய்ய ஆதி முத்திரை செய்ய வேண்டும். பிறந்த குழந்தைகள் கட்டை விரலை உள்ளுக்குள் வைத்து நான்கு விரல்களால் மூடிக் கொண்டிருக்கும் இல்லையா? அதுதான் ஆதி முத்திரை. இந்த முத்திரை செய்யும் காலத்தில் உலர்ந்த திராட்சை, பேரீச்சை, முருங்கைக்கீரை, கருஞ்சீரகம், தேன் போன்ற வற்றைச் சாப்பிட வேண்டும்.

மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு... பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!

முடி உதிர்தலைத் தடுக்கும் பிரசன்ன முத்திரை

உடலில் உஷ்ணத்தன்மை சரியாக இருந்தால் முடி உதிராது. இளநரையும் வராது. இதற்கு உதவுவது பிரசன்ன முத்திரை. சுண்டு விரல், மோதிரவிரல், நடுவிரல், ஆள்காட்டிவிரல் நான்கையும் நகங்கள் படுவது போல வைக்க வேண்டும். கட்டைவிரல் இரண்டும் இதயத்தைப் பார்த்தபடி இருக்க வேண்டும்.

மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு... பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!
மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு... பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!

கருமுட்டைகள் உருவாக சஹக சங்கு முத்திரை

கர்ப்பப்பையில் பிராண ஓட்டம் சரியாக இல்லை யென்றால் கருமுட்டைகள் உருவாகாத தன்மை, அப்படியே உருவானாலும் கரு தங்காத நிலை இருக்கும். இதை சஹக சங்கு முத்திரை சரிசெய்யும். கைவிரல்களை ஒன்றாகக் கோத்துக்கொண்டு பெருவிரல்கள் மட்டும் நேராக இருக்க வேண்டும். கருமுட்டைகள் உருவாகவும் மன அமைதிக்கும் உதவும் இந்த முத்திரை.

மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு... பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!

பேறுகால நீரிழிவுக்கு வருண முத்திரை

கர்ப்பமாக இருக்கும்போதும் குழந்தை பிறந்த பிறகும் நீரிழிவு வராமல் இருக்க வருண முத்திரை செய்ய வேண்டும். சுண்டுவிரல், பெருவிரல் நுனி இணைந் திருக்க, மற்ற மூன்று விரல்கள் தரை நோக்கி இருக்க வேண்டும். இந்த முத்திரை யால் கணையம் நன்கு இயங்கும். அதனால் நீரிழிவு வராமல் தடுக்கலாம். வந்தால் கட்டுப்படுத்தலாம். வருண முத்திரை உடலில் நீரின் தன்மையைச் சமமாக்குவதால் உடல் மற்றும் முகத்தில் இருக் கிற சுருக்கங்கள் சரியாகும்.

மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு... பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!

முதுகுவலி போக்கும் அனுசாசன முத்திரை

கழுத்து முதுகுவலி, நடு முதுகுவலி, அடி முதுகுவலி என முதுகுவலியை மூன் றாகப் பிரிக்கலாம். நுரை யீரல் மற்றும் இதயத்தில் பிராண ஆற்றல் குறைவாக இருந்தால் கழுத்து முதுகுவலி வரும். சிறுகுடல் மற்றும் பெருங்குடலில் சரியான பிராண ஓட்டம் இல்லை யென்றால் நடு முதுகுவலி வரும். இவர்களுக்கு அஜீரணக் கோளாறும் இருக்கும். அடிமுதுகில் வலி இருந்தால் சிறுநீரகம், சிறுநீர்ப்பையில் பிரச்னை இருக்கலாம். இந்த வலிகளில் ஒன்று இருந்தாலும் அனுசாசன முத்திரை செய்யலாம். சுண்டுவிரல், மோதிர விரல், நடுவிரல் மூன்றையும் உள்ளங்கைகளுக்குள் மடித்து, கட்டைவிரலை மோதிர விரலின் மையத்தில் படுவதுபோல வைக்க வேண்டும். ஆள்காட்டி விரல் நேராக இருக்க வேண்டும். மூன்றுவித முதுகுவலியும் நீங்கும்.

மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு... பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!

மன அழுத்தம் போக்கும் சின் முத்திரை

பெருவிரல் நுனியானது ஆள்காட்டி விரல் நுனியில் சின்ன அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும். இந்த முத்திரை செய்வதால் மன அழுத்தமும் டென்ஷனும் நீங்கும். இதனால் வருகிற தலைவலியும் சரியாகும்.

மன அழுத்தம், மலட்டுத்தன்மை, முடி உதிர்வு... பிரச்னைகள் தீர்க்கும் மூன்று நிமிட முத்திரைகள்!

மாதவிடாய் வலிக்கு ஆகாய முத்திரை

நடுவிரல், பெருவிரல் இரண்டையும் சேர்த்து நுனியில் சின்ன அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும். மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி, அதிக உதிரப் போக்கு ஆகியவை படிப்படியாகச் சரியாகும்.

நன்றி : அவள் விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More