அலுவலகம் செல்லும் தாய்மார்களின் பெரிய பிரச்சனை குழந்தைக்கு பாலூட்டுவதும், வெகு நேரம் அலுவலகத்தில் இருப்பதால் பால் கட்டிக் கொள்வது அல்லது பால் கசிந்துக் கொண்டு ஆடையை நனைப்பது ஆகிய இரண்டுமே!
தாய்ப்பாலானது ஃபிரிட்ஜில் வைக்காமலேயே 5மணி நேரம் வரைக் கெடாமல் இருக்கும்….. அதனை ஃபிரிட்ஜில் வைத்தால் இன்னும் பாதுகாக்கலாம்…
இப்படி சேமிக்கப்
பட்ட பாலை நாம் வீட்டில் இல்லாத போது நம் குழந்தைக்கு பாட்டி, தந்தை, குழந்த பராமரிப்பாளர் என குழந்தையோடு நெருங்கிப் பழகும் யார் வேண்டுமானாலும் புகட்டலாம்…. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மேனுவல் பிரஸ்ட் பம்ப் எனப்படும் கீழ்காணும் படத்தில் உள்ளக் கருவியை வாங்க வேண்டும்….
இந்தக் கருவியைப் பயன்படுத்தி காலை நீங்கள் அலுவலக்ம் செல்லும் முன்பு குழந்தைக்கு நன்கு பாலூட்டியதும் நீங்கள் நிறைய தண்ணீர் மற்றும் பால் குடித்துவிட்டு ஒரு 30நிமிடங்கள் கழித்து உங்கள் மார்பகத்தில் உள்ள பாலினை இந்த பம்ப் மூலம் எடுத்து வீட்டில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும், இது நீங்கள் வீட்டில் இல்லாத சமயம் குழந்தைக்குப் பயன்படும். இதனை சேமித்து வைக்க குழந்தைக்கு பாலூட்டும் நான்_டாக்ஸிக் பால் புட்டிகளையே பயன்படுத்தலாம்…
இதனை ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாப்பதால் குழந்தைக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை!
(மாற்று மருத்துவம் ஜூலை 2010 இதழில் வெளியானது)
நன்றி : கீற்று இணையம்