பச்சிளங் குழந்தைகளின் இயல்பான உணவு பாலாதலால் அவைகளுக்குப் பால் ஊட்டப் பெறுகிறது. முதுகெலும்புடைய பெண் விலங்குகள் எல்லாம் தம் குட்டிகள் அல்லது குழந்தைகளைப் பாலூட்டம் தந்தே வளர்க்கின்றன. இந்த நீர்மப் பொருளான பால் (fluid) அவைகளுடைய மார்பகத்திலோ மடி யிலோ சேமித்து வைக்கப் பெற்றுள்ளது. பிறந்த குட்டி அல்லது குழந்தைகளுக்கு ஒவ்வொரு பெண்ணும் தரும் பால் முழுமையான நிறை உணவாகும்.
புரதம், கொழுப்பு, பால்சர்க்கரை, தண்ணீர் ஆகிய ஊட்டப்பொருள்கள் (ingredients) பாலில் கலந்திருந்தாலும் இவைகளின் கலப்பு விகிதாச்சாரம் மிக வேறுபாடுடையதாகவே ஒன்றுக்கொன்று இருக்கும். பால் புரதம் (milk protein)) முக்கியமான நோய் தணிக்கும் அமைனோ அமிலங்கள் (aminoacid)) கொண்டது. இளம் பிஞ்சுகளின் வயிற்றில் பாலால் உருவாகிய மெல்லிய தயிரால் (soft curd)) இணைந்த கொழுப்பு உருண்டைத்துகள் (fat globles)) கொழுப்பு உணவுகளால் அடிக்கடி தோற்றுவிக்கப்படும் வயிற்றுத் தொல் லையின்றி எளிதில் செரிப்பதற்கு வழிவகுக்கின்றன.
தாய்ப்பால் ஊட்டப் பெறாத குழந்தைகள், பாஸ்டர் (Pasteur 1822-1895) முறைப்படி பசும்பாலைச் சூடாக்கித் தூய்மை செய்து இளக்கி இனிப்பூட்டிய பொடிப் பாலையோ அல்லது செய்முறை விளக்கக் கூட்டத்தில் பல மாற்றங்கள் செய்து தயாரித்த உலர்ந்த பால் பொடியால் பக்குவப்படுத்திய பாலையோ, ஊட்டப்பட வேண்டியவராவர். கழுதை, வெள்ளாடு, பசு, நீர் எருமை, செம்மறி ஆடு, குறி ஆடு, ஒட்டகம், நாய், குதிரை, கலைமான், தென்னாப்பிரிக்க ஒட்டக இன விலங்கு (llama) ஆகிய விலங்குகளின் பாலையும் வெவ்வேறு நாடுகளில் குழந்தைகளுக்கு ஊட்டுகின்றனர்.
வேறு உணவுகளையும் தருவதற்கு முயன்றுள்ளனர். பதினேழாம் நூற்றண்டில் தண்ணீரில் வேகவைத்த ரொட்டியை (pap) ஊட்டினர். பிரெஞ்சு மருத்துவர் அறிவுரைப்படி பீரில் (beer) ரொட்டியை நனைத்தும் கொடுத் துள்ளனர். மனிதர்கள் தம் குழந்தைகளை நான்கு அல்லது ஐந்து மாதங்களான பிறகு பாலை மறக்கடிக்கச் செய்து வேறு வகையான தக்க பொருள்களையும் கொடுக்க முயல்கின்றனர்.
நன்றி : கீற்று இணையம்