வறண்ட சருமத்தை குணப்படுத்துவதில் செம்பருத்திப்பூ மற்றும் ரோஜா முக்கியப் பங்காற்றும். கற்றாழை ஜெல், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் உடலை ஈரப்பதத்துடன் வைக்க உதவும்.
தேவையான பொருட்கள்
செம்பருத்திப்பூ தூள் – 2 தேக்கரண்டி ரோஜா பொடி – 1 தேக்கரண்டி
கற்றாழை ஜெல் – 2 தேக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
செய்முறை:
சிறிய பாத்திரத்தில் செம்பருத்திப்பூ தூள், ரோஜா பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலக்கவும். பின்பு ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து கண்ணாடி குமிழில் மூடி வைக்கவும்.
இந்த மாய்ஸ்சுரைசரை தினமும் முகத்தில் போட்டு வந்தால் வறண்ட சருமம் படிப்படியாக சரியாகும்.
வறண்ட சருமத்தை குணப்படுத்துவதில் செம்பருத்திப்பூ மற்றும் ரோஜா முக்கியப் பங்காற்றும். கற்றாழை ஜெல், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் உடலை ஈரப்பதத்துடன் வைக்க உதவும்.
நன்றி | மாலை மலர்