March 31, 2023 6:28 am

‘திலகமிடுதல்’ எனும் தமிழர் பாரம்பரியம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நெற்றியில் திருநீறு, சந்தனம், குங்குமம் இடுவதை ‘திலகமிடல்’ எனக் கூறுகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய பழக்கங்களில் ஒன்றான இது, பெண்களின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கின்றது.

2000 ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்ட சங்க இலக்கியங்களிலேயே பெண்கள் திலகமிடுவதை குறிப்பிட்டுள்ளார்கள். ‘திலகமிடுதல்’ என்பதே பிற்காலத்தில் ‘பொட்டிடுதல்’ என்று அழைக்கப்படுகிறது.

சந்தனத்தை பொட்டிடுதல் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.

அதேபோன்று மஞ்சள், ஜவ்வாது, படிகாரம், சுண்ணாம்பு, தாழம்பூ சாறு ஆகியவற்றைக் கொண்டு குங்குமம் தயாரிக்கப்படுகிறது. எனவே, மஞ்சளுடன் குங்குமம் சேரும் போது அது கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

திருநீற்றை நெற்றியில் இட்டுக்கொள்வதன் மூலம், தலையில் படிந்திருக்கும் தேவையற்ற நீர் உறிஞ்சப்படுகிறது.

‘பொட்டிடுதலால், இரண்டு புருவங்களின் மத்தியில் இருக்கும் ‘ஆக்ஞா’ சக்கரத்தின் இயக்கம் தூண்டப்பட்டு, சிந்தை ஒருமைப்படும் என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்வதால் ‘பிட்யூட்டரி’ என்ற நாளமில்லா சுரப்பி குளிர்ச்சி அடையும்.

அதன்மூலம் மூளையின் பின்பகுதியில் ஞாபகங்களின் பதிவாக இருக்கும் ‘ஹிப்போ கேம்ப்ஸ்’ என்ற பகுதியில் ஞாபத்துக்கான தூண்டுதல்கள் சிறப்பாக நடைபெறும். இவ்வாறாக யோக அறிவியல் முறைகளில் ‘நெற்றியில் திலகமிடுதல்’ முக்கியமானதாகக் கூறப்படுகின்றது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்