Sunday, March 7, 2021

இதையும் படிங்க

மர ஆட்சி | முல்லை அமுதன் கவிதை

எங்களின் வளவில் தான்எல்லாம் வளர்ந்தன..புல்லாகியும்,மரமாகியும்எங்களுக்காகமரம்வளைந்து கொடுத்துஇளமையை ஆராதித்ததும்சில காலம்தான்.என் காதலுக்கு இசைந்து கொடுத்தது புற்கள்.காலம் அனைத்தையும் உருமாற்றியது.மரம் அனைவரின் ஆசிர்வாததுடனும்அரியணையேறியது.எங்களின்ரகசியங்களைத் தெரிந்த மரம்புற்களைத்...

உயிர்க் கவிதை | கவிதை | சிவநாதன்

உயிர் உள்ள சொற்கள்தேடி உயிர் விட்டுக்கொண்டிருந்ததொருகவிதை மனவெளியில்எண்ணச்சருகுகள்அங்கங்கேசிதறிக் கிடைக்க தனிமைக் கதவின்தாழ்ப்பாள் திறந்துநினைவெனும்தாழ்வாரங்களில்நிலையில்லாது வழியும்ஞாபக...

அவுஸ்ரேலியா சங்கநாதம் ஆடற்கலையகத்தின் ‘ஆடற்தடங்கள் பெருநூல் – 2021’ வெளியீடு!

சங்கநாதம் ஆடற்கலையகம் சகல நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் நடன ஆற்றுகைக்கலைஞர்களின் கலையுலக...

பிறந்த நாள் பரிசு | சிறுகதை

“என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா?” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி?” “இல்ல.....

குப்பைகளும், கொடுமைகளும் அங்கே.. | வை.கே.ராஜூ

கண்டேன் காட்சியொன்றுகடற்கரை மணல்பரப்பில்,கண்கவர் கோலம் -அந்தமதில்சுவர் மறைப்பில். விரிப்புக்கள் இல்லாவிசித்திர உலகம்மறைப்புக்கள் இன்றியேஇதழ் நின்று உரசும். கேட்க யாருமில்லைபதிலும் அவசியமில்லைகேட்டால்தானே சொல்லபார்க்க...

நிலவும் அவனும் | கவிதை | உஷா விஜயராகவன்

பேரழகு பொருந்தியமங்கை தான்  நிலவோ.. சுடர்விழியால் இவனை தீண்டிஅணைத்துக் கொண்டாளோநிலா மங்கை.. இதன் வெளிப்பாடுஇவனது இசையோ.. இவனது...

ஆசிரியர்

என்னவன் | சிறுகதை | தமிழினி

மாலை நேர மஞ்சள் வெயிலின் அழகில் லயித்து கொண்டிருந்தேன். எங்கோ தூரத்தில் குயில் கூவும் இனிமையான தேனிசை காதில் ஒலித்தது. வாகன புகை , இரைச்சல் இல்லாத அமைதியான அந்த பூங்காவின் அழகு மனதில் பேருவகை பெருகச் செய்தது. என்னவனின் இருப்பு என்னை மேலும் சாந்தப்படுத்தியது.

என் அருகில் என்னவனனின் கைகளப்பற்றியபடி அவன் தோளில் சாய்ந்திருந்தேன். இளமையில் இருந்த பிடியின் இறுக்கமில்லாது தளர்நது இருந்த கையை மெதுவாக வருடியபடி அவன் முகத்தை கண்டேன். பிடியின் இறுக்கம் மட்டுமே தளர்ந்திருந்ததே தவிர எங்களுக்குள்ளே இழையோடிக்கொண்டிருந்த காதல், ஆலமரமாக பல கிளை விரித்து எப்புயற்காற்றையும் எதிர்த்து நிற்கும் வலிமையோடு இருந்தது. அவன் கண்களை ஆழமான பார்வையினால் பார்த்துக்கொண்டே, என்னவனை நான் கண்டெடுத்த தினத்திற்கு பயணமானேன்.

என் பெயர் தமிழினி. என்னவனைக் கண்ட நாள் முதல் அவனை பெயர் சொல்லி அழைத்ததில்லை. ஆதலால், அவனுக்கு என்னுள் நான் வைத்த பெயர் ‘என்னவன்’. பெயருக்கேற்றாற் போல் அவன் ஒவ்வொரு நொடியும் என்னவனாகவே இருந்தான்.

அவனை நான் முதன்முதலில் சந்தித்தது ஒரு விபத்து என்றே கூறலாம். ஆம். அந்த ஒரு நொடி எங்களிருவரின் வாழ்வையும் புரட்டிப் போட்ட அந்த ஒரு கணத்தை இந்த நொடி நினைத்தாலும் உடலும் உள்ளமும் ஒரு சேர சிலிர்க்கிறது. இருவருக்கும் துள்ளலான இளம் வயது. வயதிற்கேற்ற வனப்பும், இனக்கவர்ச்சியை தாண்டிய முதிர்ச்சியும் இருவரிடமும் ஒரு சேர இருந்ததில் வியப்பில்லை.

எங்களிருவருக்கும் பொதுவான பெண் தோழி ஒருவரே என்னை அவனிடத்தில் அறிமுகப்படுத்தினார். அந்த நொடி, எங்களிருவரையும் மாற்றப்போகும் முக்கிய நொடி என்று இருவரும் அப்பொழுது உணரவில்லை. அதன்பின், சின்னச்சின்ன தொலைபேசி உரையாடல்கள், வாழ்த்துக்கள், புத்தகப்பறிமாற்றங்கள், சின்னச்சின்ன அன்பளிப்புகள் என்று காலம் உருண்டோடியது. எப்பொழுது அவன் என்னவனாக மாறிப்போனான் என்பது இதுவரை புரியாத புதிரே. அந்த புதிருக்கு விடை தேட வேண்டிய அவசியம் இருவருக்கும் ஏற்பட்டதில்லை.

அதன் பின்பு நடந்த அனைத்தும் சுகமாகவே இருந்தது. வாழ்க்கையின் ஏற்றஇறக்கங்கள் அனைத்திலும் சிறிதும் சலிப்படையாது என்னோடு பயணித்தவன். எப்பேற்பட்ட ஊடலின்போதும் என் மீது கோபம் கொள்ளாது எனக்கு பக்கபலமாக நின்று பொறுமையாக விளக்கியவன். சில வருடங்கள் காதலுக்குபின் இருவீட்டுப் பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் இனிதே நடந்தேறியது. எங்கள் அன்பிற்கு சாட்சியாய் முத்தான மூன்று குழந்தைகள். மூவரும் வளர்ந்து தங்களின் இணையர்களோடு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே செல்வோம். இணைபிரியாத தோழர்களாகவும் இருந்தோம். காலம் தான் எவ்வளவு வேகமாக உருண்டோடுகிறது. ஆனாலும், என்னவனோடு நான் கழித்த ஒவ்வொரு நொடியும் பசுமரத்தாணி போல் என் மனதில் ஆழப்பதிந்து இருக்கிறது.

இன்று, நாங்கள் முதலில் சந்தித்தது போன்ற இளமை எங்களிடமில்லை. என்னைத்தாங்கிப் பிடித்த அவனின் தோள்கள் வலுவிழந்துவிட்டது. என் நடையும் தளர்ந்துவிட்டது. ஆனால், எங்களின் காதல் மட்டும் அன்றைக்காட்டிலும் இளமையாக இருக்கிறது.

இதோ, என்னவன் இவ்வுலகத்தின் பூதவுடலை விட்டு பெருவாழ்வு வாழக்கிளம்பிவிட்டான். அவனருகில், நானும் படுத்துள்ளேன். ஆம். இந்த பயணத்திலும் அவனை பிரிந்திருக்க முடியாத என் உயிர் அவன் உயிரோடு கிளம்பிவிட்டது. வாழ்க்கையை முழுமையாக இரசித்து வாழ்ந்துவிட்ட ஒரு இணைபிரியா தம்பதியின் மரணம் என்று அந்த பூங்காவில் எங்களைச் சுற்றி இருந்த அனைவரும் புளங்காகிதமுற்றனர். இளையோர் எங்களைப்போன்ற சோடிப்பொருத்தம் அமைய வேண்டினர்.

அனைவரின் மனதும் கணத்தது. சுற்றி இருப்பவர்களின் அழுகுரல் கேட்டது. ஆனால், எனோ நாங்கள் மகிழ்ச்சியாக தொடங்கிய பயணம் இது என்பதை மக்களின் மனம் ஏற்க மறுத்தது. கணத்த இதயத்தோடு அருகருகே தோண்டப்பட்ட புதைகுழியில் எங்களை வைத்து எங்கள் மீது மண் கொண்டு மூடினர். ஆனால், மூடுவதற்கு முன் எங்கள் கைகள் இறுகப்பற்றி இருந்ததை ஒருவரும் கவனிக்கவில்லை. சூரியன் மறைந்து மேகத்தினூடே ஒளிர்ந்துக்கொண்டிருந்த நிலா எங்களை பார்த்து சிரித்து மகிழ்ந்தது!! 

நன்றி : சிறுகதைகள்

இதையும் படிங்க

நூல் கடை | முல்லை அமுதன்

பலர் கடை விரித்தனர்.கண்கவர் விருந்தாய் நூல்கள்..வண்ணத்துப்பூச்சிகளின் கனவுடன்எழுத்தர்களின் அணிவரிசை நூல்களாய்இறைந்துகிடந்தன..வாங்கிவர்கள் பலராய்..வேடிக்கை பார்த்தவர்கள் சிலராய்..அரட்டை அடிக்கவே வந்தவர்கள் அதில் ஒரு சிலர்..அரசியல் முடிவுகளை...

சுமை தாங்கி | கவிதை | தமிழ் ப்ரியா

சிறுவயது முதல்எங்கள் தலையிலே சுமைஅலை பாயும் கூந்தலாக.. வயதுக்கு வந்தவுடன்உடலியல் மாற்றங்களின் சுமைபொங்கி வரும் இளமையாக.. கணவனைக் கைப்பிடித்ததும்வயிற்றிலே சுமைதாய்மை என்னும்...

அமெரிக்காவின் உயரிய விருதை பெறுகிறார் சட்டத்தரணி ரனிதா ஞானராஜா!

இலங்கையின் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா, அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் ‘International Women...

தூரமும் அருகே… | சிறுகதை | விமல் பரம்

“மோதிரத்தைக் காணேல இவன்தான் எடுத்திருப்பான். கள்ளனை வீட்டில வைச்சிருக்காதே கலைச்சுவிடு. என்னைப் பார்க்க ஒருத்தனும் வேண்டாம்” அப்பா சொன்னதைக் கேட்டதும் திகைத்து விட்டேன். “அண்ணை, சத்தியமாய்...

கிளிநொச்சியில் சிறப்பாக நடந்த நடுகை வெளியீட்டு விழா!

நடுகை கவிதை இதழ் வெளியீட்டு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.02.2021) மாலை  கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நிறைவுபெற்றது. நடுகை " அம்பலம்" சஞ்சிகையை நடாத்தி வந்த  குழுமத்தினரால்.....

ஆரையம்பதி உலகநாச்சியர் | பொன் குலேந்திரன்

முன்னுரை கிழக்கு இலங்கையில் மட்டக்களப்பு ஏரிக்கருகில் உள்ள ஆரையம்பதி ஊருக்கும், இந்திய  கிழக்கு மாநிலம் ஒரிசா என்ற கலிங்க தேசத்துக்கும் உள்ள தொடர்பினை இந்த கதை...

தொடர்புச் செய்திகள்

தூரமும் அருகே… | சிறுகதை | விமல் பரம்

“மோதிரத்தைக் காணேல இவன்தான் எடுத்திருப்பான். கள்ளனை வீட்டில வைச்சிருக்காதே கலைச்சுவிடு. என்னைப் பார்க்க ஒருத்தனும் வேண்டாம்” அப்பா சொன்னதைக் கேட்டதும் திகைத்து விட்டேன். “அண்ணை, சத்தியமாய்...

பிறந்த நாள் பரிசு | சிறுகதை

“என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா?” “திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி?” “இல்ல.....

விடியுமா.. | சிறுகதை | கு.ப.ரா.

தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது. ‘சிவராமையர் - டேஞ்சரஸ்-’ என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன....

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 26 | பத்மநாபன் மகாலிங்கம்

முன்னர் எட்டாம் வகுப்பில் சித்தி அடைந்தவர்களுக்கு கனிஷ்ட பாடசாலை சான்றிதழும் (Junior school certificate, J.S.C), பத்தாம் வகுப்பில் சித்தி அடைந்தவர்களுக்கு சிரேஷ்ட பாடசாலை சான்றிதழும் (Senior school certificate,...

உயிர்க் கவிதை | கவிதை | சிவநாதன்

உயிர் உள்ள சொற்கள்தேடி உயிர் விட்டுக்கொண்டிருந்ததொருகவிதை மனவெளியில்எண்ணச்சருகுகள்அங்கங்கேசிதறிக் கிடைக்க தனிமைக் கதவின்தாழ்ப்பாள் திறந்துநினைவெனும்தாழ்வாரங்களில்நிலையில்லாது வழியும்ஞாபக...

பெண்களே கோபம் வராமல் தடுக்க வழிமுறைகள்!

கணவனின் கோமாளித்தனத்தை மனைவி மறந்தால் தான் இல்லறம் நல்லறமாகும். அதே போல் மனைவியின் முட்டாள் தனத்தை மறந்தால் தான் அங்கு அன்பு துளிர்க்க...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

சாதாரண தரப் பரீட்சையில் ‘குதிரை ஓடியவர்’ கைது

கல்விப் பொதுத் தராதர சாதாரதரப் பரீட்சையின்போது பரீட்சார்த்தியாக ஆள்மாறாட்டம் செய்து, பரீட்சை எழுதுவதற்காக அமர்ந்த குற்றச்சாட்டுக்காக ஒருவர் வலஸ்முல்லை பகுதியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டானியல் பாலாஜி வெளியிட்ட ‘இனி’ | ஈழக் குறும்படம்! | திரைப்படம் இணைப்பு

இனி என்ற ஈழக் குறும்படத்தை தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் டானியல் பாலாஜி வெளியிட்டுள்ளார். ஈழத்தை சேர்ந்த இளம்...

தமிழ், முஸ்லிம் அடிப்படைவாதம் தலைதூக்க அரசாங்கம் இடமளிக்காது – ஜனாதிபதி

தமிழ் அடிப்படைவாத, பிரிவினைவாத பயங்கரவாதமும் இஸ்லாம் மதவாத அடிப்படைவாதமும் தலைதூக்க தமது அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ குறிப்பிட்டார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின்...

வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வைத்திய தம்பதிகளின் வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் தாக்கியதில் வைத்தியர்களான கணவனும், மனைவியும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் கடந்த 1ஆம் திகதி...

மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் 17 கோரோனா சடலங்கள் அடக்கம்!

மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் நேற்று வரையில் 17 கோரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறித்த பகுதியில் சடலங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கைகள்...

முடக்க கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட்டது அக்லாந்து!!

கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு அடையாளம் காணப்பட்டதை அடுத்து அமுலுக்கு வந்த முடக்க கட்டுப்பாடுகளில் இருந்து நியூசிலாந்தின் மிகப் பெரிய நகரமான அக்லாந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுவிக்கப்படவுள்ளது.

துயர் பகிர்வு