கவிதை | அது ஒரு நிலாக் காலம் | கயல்விழி கவிதை | அது ஒரு நிலாக் காலம் | கயல்விழி

 

தாய் மடியின் சுகமும்
தந்தை நெஞ்சின் அணைப்பும்
காலம் பல கடந்தாலும்
மனசை விட்டு போயிடுமா…

எந்த நாடு சென்றாலும்
அந்த சுகம் கிடைத்திடுமா…

ஊர் உறவின் பாசமும்
சொந்த மண்ணின் வாசமும்
தேசம் விட்டு போனாலும்
மனசை விட்டு போயிடுமா…

தென்றல் காற்று சுகந்தமும்
குடிசை வீட்டு வசந்தமும்
தேசம் விட்டு போனாலும்
மனசை விட்டு போயிடுமா…

வயல் வரம்பில் நடந்ததும்
கொட்டும் அருவியில் குளித்ததும்
தேசம் விட்டு போனாலும்
மனசை விட்டு போயிடுமா…

கிட்டி புல்லு அடித்ததும்
வெட்ட வெளியில் படுத்ததும்
தேசம் விட்டு போனாலும்
மனசை விட்டு போயிடுமா…

எத்தனை தான் கிடைத்தாலும்
ராஜ வாழ்க்கை வாழ்ந்தாலும்
முடிந்து போன முற்காலம் – நம்
நெஞ்சில் பதிந்த நிலாக்காலம்!

ஆசிரியர்