April 1, 2023 6:15 pm

கவிதை | உண்மை மறந்த உடன்படிக்கை | முல்லைஅமுதன்கவிதை | உண்மை மறந்த உடன்படிக்கை | முல்லைஅமுதன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

துப்பாக்கிகள் கூட

அகிம்சை

பற்றி

போதிக்கிறது.

 

சமாதானம் பேசிய படியே

எங்களூரில்

இயந்திர வாகனங்கள்

வந்தன..

 

குழந்தைகளின் தலைகளை

நெரித்தபடி..

இராணுவம்

வயிற்றை கிழித்து

பயங்கரவாதியைத் தேடுகிறான்..

 

வகுப்பறையில்

தலமைஆசிரியர் முன் நின்றேன்

எங்கு

குண்டு வைத்தாய்

என்ற விசாரனைக்காக…

 

நீ சுட்டாய்..

தீவிரவாதி என்று நீயே

சொல்லிக்கொள்கிறாய்..

 

ஆமாம் என்கிறார்கள்

அண்டி நிற்பவர்கள்.

 

இறந்த பின்

எந்த உடன்படிக்கையின் கீழ்

என்

பிணத்தை

விசாரனை செய்யப்போகிறீர்கள்?

 

 

 

– முல்லைஅமுதன் –

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்