March 27, 2023 1:09 am

அரண்மனையில் ஒரு போட்டி | குட்டிக் கதைஅரண்மனையில் ஒரு போட்டி | குட்டிக் கதை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

விஷ பாம்புகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது, இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர் தேர்ந்தெடுக்கலாம்…

உயிர் பிழைப்பது சிரமம் என்பதால் போட்டி அறிவித்து வெகு நேரம் ஆகியும் யாரும் போட்டிக்கு வரவே இல்லை…

திடீர் என்று ஒரு இளைஞன் குளத்தில் குதித்ததும் மன்னருக்கு குஷி. உயிரையும் துச்சமாக மதித்து ஒரு சாதனையாளன் போட்டிக்கு தயாராகி விட்டானே..?

ஒரு வழியாக நீந்தி பத்திரமாக கரையேறி விட்டான். அவனை கட்டி அணைத்து, பாராட்டுதல்களை தெரிவித்து..

“உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்..? ஆயிரம் வராகன் பொன்னா..?

இல்லை…

பின்னே, 10 கிராமங்களா..?

“ப்ச்! வேண்டாம்…

ஆஹா..! அப்படி என்றால் இளவரசியை திருமணம் செய்து கொள்கிறாயா..?

தேவை இல்லை…

இது மூன்றில் ஒன்றை தானே பரிசாக அறிவித்து இருந்தேன். மூன்றுமே வேண்டாம் என்று சொல்லி விட்டாயே..? ஆனாலும் உன்னை வெறும் கையுடன் அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள், கட்டாயம் அதை தருகிறேன்…

என்னை எவன் இந்த குளத்தில் தள்ளி விட்டான் என்று தெரியனும்..! 

 

 

நன்றி : இன்று ஒரு தகவல் | கரை செல்வன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்