March 23, 2023 7:20 am

தோல்விகள் தொடரில்லை | கவிதை | எஸ். வீ. ஆர். பாமினிதோல்விகள் தொடரில்லை | கவிதை | எஸ். வீ. ஆர். பாமினி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நண்பா எழுடா

இந்தப் பூமியே உனக்கே எழுடா

உனக்கென்றும் நாட்கள் உண்டு

அதுவரை தோல்வியே கிடையாது

யானையின் பலமே உனக்கு

அந்த சிறுத்தையின் குணம்தான் இருக்கு

நினைத்ததையெல்லாம் முடிப்பாய்

நம்பிக்கையுடன் தலை நிமிர்ந்து நின்றால்

தோல்வியைக் கண்டதும் ஒழிந்தால்

வாழ்க்கை துன்பத்தில்த்தான் முடியும்

வீரத்துடனே தோல்வியை எதிர்த்தால்

சரித்திரம் உன் பெயர் எழுதும்

புத்தகப் பாடமும் வேண்டும்

அனுபவப் பாடமும் வேண்டும்

அனுபவம் பாடம் ஒன்றே

நம் வாழ்வில் ஒளியை ஏற்றும்

எறும்பை சிறையில் இட்டால்

அது நிலத்தை துளைத்து வெளியேறும்

யானையை சிறையில் இட்டால்

தகர்ப்பதன் மூலம் வழிதேடும்

நுண்ணிய புத்தியைக் கொண்டு

நீ சிந்தித்து செயல்ப்படு தோழா

வாழ்வினில் தோல்விகள் வரினும்

உன் சிந்தனைக்கு ஏது தோல்வி

உன்னை சிறையில் இடினும்-

உன் சிந்தனைக்கு சிறையே இல்லை

தோல்விகள் நிலையென இருந்தால்

வெற்றிகள் என்றுமே இல்லை

தோல்வியே கதியென இருந்தால்

வெல்பவர் நாட்டில் இல்லை

வென்றவர் வாழ்க்கையை தேடு

அதில் தோல்விகள் இருப்பதை பாரு

கற்றதை வைத்து கொஞ்சம்

அனுபவப் பாடமும் சேரு

நீயும் பெரியவன்தான்டா

இந்தப் பூமியே வியக்கும் தோழா

மனிதனை மனிதன் வெல்ல

விதியோ மனிதரை வெல்லும்

பல நோய்கள் கூட அதைச் செய்யும்

போரினில் வென்றவர் பலரும்

மெஞ்ஞானம் பெற்றவர் சிலரும்

நோயினில் வீழ்ந்தது உண்டு

நம்பிக்கையுடன் தலைதூக்கு

இறுமார்ப்புடன் நெஞ்சை நிமிர்த்து

வெற்றிகள் உனை வந்து சேரும்

தோல்விகள் தனியென் மறையும்

நீயும் இப் பூமியில் வாழவே

தோற்றவனாய் சாவதற்க்கு அல்ல…

 

 

 

நன்றி : தமிழ் நாதம் | எஸ். வீ. ஆர். பாமினி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்