March 20, 2023 11:07 pm

கல்லறை வீரர்களே கண் விளியுங்கள்!கல்லறை வீரர்களே கண் விளியுங்கள்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இப் பிரபஞ்சத்தில் ஆயிரம் ஆயிரம் அர்ப்பணிபுக்கள்

அத்தனையும் எம் ஈழ புதல்வர்களின்

உன்னத அர்ப்பணிப்புக்கு ஈடாகுமா ?

 

சத்தியத்தோடு விடை பெற்றுச்சென்ற

உன்னத அர்ப்பணிப்புக்களின் உயிர்க்கொடைகள்

வெறும் ஊமைகள் ஆக முடியுமா ?

 

விடுதலை வேட்கைக்காய் வீட்டையே துறந்தீர்

தமிழ் ஈழம் ஒளிபெற திரியாக எரிந்தீர்

தமிழீழ தாகத்தினை தீர்திட சென்றீர்

 

தமிழரின் மனங்களில் என்றும் அழியாமல் வாழ்வீர்

ஈழம் பிறப்பதற்காய் எவ்வளவைச்சுமந்தீர்கள்

எதற்கும் சாயாத சரித்திரப் புயல்கள் நீங்கள்

ஈழ மண்ணுக்கு மட்டும் புரியும் உங்கள் வீரம்

பற்றி தம்மை தம் மண்ணுக்கு விதையாக்கி

சென்ற வேங்கைகள் இவர்கள் என்று

எதிரியை கதிகலங்க வைத்த பிஞ்சுகள்

 

இவர்கள் புலனுக்குத் தெரியாத புனிதர்கள்

இவர்கள் மரணத்தை மகிழ்வோடு அணைத்த சரித்திர புருசர்கள்

இவர்கள் ஈழத்தை காதலித்தவர்கள்

அதனுள் தமிழரின் வீரத்தை கலந்தவர்கள்

 

கயவனைக் கனவிலும் கலங்கவைத்த

எம் காவற் தெய்வங்கள் இவர்கள்

நீங்கள் உறங்கிய கல்லறைகள் சிதைக்கப்பட்டன

 

சிதைக்கப்பட்ட இடத்தில் நரிகளின் கொண்டாட்டம்

ஆனாலும் எதிரியின் மனதில் இன்னும் இருப்பதும்

உங்கள் செயல் உங்களால் ஏற்பட்ட பயத்தின் பயன்

 

“தம் உயிர் தந்து எம் உயிர் காத்த தயாளர்களே ”

உமை வணங்க தடைகள் போட்டாலும்

வணங்கிய தமிழரை சுட்டு வீழ்த்தினாலும்

எம் நெஞ்சில் உமை தாங்கிடுவோம்

எங்கிருந்தாலும் உமை நினைப்போம்

 

எல்லைகள் தாண்டி கல்லறை வீரரை நெஞ்சில் சுமப்போம்

நீர் எமக்காக செய்த குருதி அர்ச்சனை நிச்சயம் பலிக்கும்

எதிரி அற்ற நிலம் நமக்கு நிச்சயம் கிட்டும்

 

நீங்கள் அணிவகுத்துக்காத்த ஈழம்

எந்த தடைகளையும் தாண்டி ஒர் நாள் மலரும்

 

 

 

நன்றி | ஈழக்குயில் |  என் ஈழ தேசமே | எஸ். வீ . ஆர். பாமினி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்