Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் பருப்பின் ஆரோக்கிய நன்மைகள்

பருப்பின் ஆரோக்கிய நன்மைகள்

2 minutes read

நாம் ஆரோக்கியமாக இருக்க உதவும் பருப்பு வகைகள் எவை எவை, அதன் பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம். 

துவரம் பருப்பு

  • துவரம் பருப்பில் நல்ல அளவில் புரோட்டீன், ஃபோலிக் ஆசிட் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 
  • மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.

பாசிப்பருப்பு

  • பாசிப்பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
  • மேலும் உடல் எடையை குறைப்பதற்கு உதவியாகவும் இருக்கும். 

பச்சை பயறு

  • பச்சை பயறு சாப்பிட்டால், உடலில் உணவுகள் எளிதல் செரிமானமடைவதோடு, உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் குறையவும் உதவியாக இருக்கும்

கொண்டைக்கடலை

  • கொண்டைக்கடலை இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும்.
  • மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

மைசூர் பருப்பு

  • மைசூர் பருப்பின் சிறப்பு புற்றுநோய் தாக்கத்தில் இருந்தும் காப்பாற்றும்.
  • உடலில் இரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்லும்.

சுண்டல்

  • கொண்டைக்கடலையில் ஒரு வகை தான், இந்த சுண்டல்.
  • இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

கடலைப் பருப்பு

  • கடலைப் பருப்பு அதிகம் சாப்பிட உடல் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும்.
  • குறிப்பாக இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும் கரோனரி இதய நோய் போன்றவை ஏற்படுவது குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு காராமணி

  • சிவப்பு காராமணி புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்றவை ஏற்படுவதைக் குறைக்கும்.
  • இதில் நிறைந்துள்ள வைட்டமின் கே, மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும்.

தட்டை பயறு

  • தட்டை பயறில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், இது இதய நோய் ஏற்படுவதை தடுக்கும்.
  • மேலும் இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது

உளுத்தம் பருப்பு

  • இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது.
  • மேலும் இதில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. 

நன்றி பெமினா வீட்டு மருத்துவம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More