செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் கைகள் குளிர்ந்து போய் இருக்கிறதா?

கைகள் குளிர்ந்து போய் இருக்கிறதா?

2 minutes read

குளிர்காலத்தில் பொதுவாக கைகள் குளிர்ந்த நிலைக்கு மாறிவிடும். ஆனால் சிலருக்கு எப்போதுமே கைகள் குளிர்ந்துபோய் இருக்கும். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ரத்தசோகை, வைட்டமின் டி குறைபாடு, தைராய்டு போன்ற பிரச்சினைகளாலும் கைகள் குளிர்ச்சி தன்மை அடையும்.

ஹீமோகுளோபின் பற்றாக்குறை நிலவினால் ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்வதில் சிக்கல் நேரும். அதன் காரணமாக கைகள் குளிர்ச்சி அடையக்கூடும். ரத்தசோகை பிரச்சினையும் உருவாகும். இரும்பு சத்து குறைபாடுதான் அதற்கு முக்கிய காரணம். இரும்பு சத்து அதிகம் கொண்ட உணவை உட்கொண்டு வந்தால் ரத்த சோகை நீங்குவதோடு கைகளில் குளிர்ச்சியும் நீங்கிவிடும்.

இதையும் படியுங்கள்: ஆப்பிளை விட சக்தி வாய்ந்த நெல்லிக்காய்
குளிர்காலத்தில் நிலவும் குளிர்ந்த வெப்பநிலை விரல்களை குளிர்வித்துவிடும். அதேவேளையில் உறைபனியாக இருந்தால் கவனமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் உறைபனி சருமம், தசைகள், திசுக்கள், எலும்புகள் வரை ஊடுருவி கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். கைகளில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

ஒருசிலருக்கு விரல்பகுதிகளில் மட்டும் அதிக குளிர்ச்சி தன்மை நிலவும். விரல்கள் உணர்ச்சியற்ற நிலைக்கும் தள்ளப்படும். அதற்கு ‘ரோனால்ட் சிண்ட்ரோம்’ என்று பெயர். இந்த பாதிப்பு காரணமாக தமனிகள் குறுகி ரத்த ஓட்டம் தடைபடும். அதனால் சருமம் சிவப்பு, நீல நிறத்துக்கு மாறும். சிறிது நேரம் கழித்து கைவிரல்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

கைக்கள் அடிக்கடி குளிர்ந்த நிலைக்கு மாறிக்கொண்டிருந்தால் வைட்டமின் டி குறைபாடு முக்கிய காரணமாக இருக்கலாம். அதன் தாக்கமாக கைகள், கால்களில் உணர்வின்மை, குளிர்தன்மை, கூச்ச உணர்வு, நரம்புகளில் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகும். வைட்டமின் பி-12 குறைபாடு அதி கரித்து கொண்டிருந்தால் ரத்தசோகை, உடல் பலவீனம், மனச்சோர்வு, வாய்ப்புண் போன்ற பாதிப்புகள் நேரும். மீன், முட்டை, இறைச்சி, பால், பால் பொருட்கள் போன்றவற்றை சாப்பிட்டுவருவது நல்லது.

நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிப்புக்குள்ளாகும்போது திசுக்கள், உறுப்புகளுக்கும் பாதிப்பு நேரும். அதன் தாக்கமாக லூபஸ் எனப்படும் வீக்கம் தோன்றும். அவை நீடித்தால் சிறுநீரகம், மூட்டுகள், ரத்த அணுக்கள், சருமம் போன்றவை பாதிப்புக்குள்ளாகும்.

இதையும் படியுங்கள்: 40 வயது ஆண்களுக்கு அவசியமானவை
தைராய்டு பிரச்சினை உடையவர்களின் கைகளும் குளிர்ந்துபோயிருக்கும். அதன் தாக்கமாக உடல் எடை அதிகரிக்கும். முடி கொட்டும். மன அழுத்தம், மலட்டு தன்மை ஆகிய பாதிப்புகளும் உண்டாகக்கூடும்.

புகை பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களின் கைகளும் குளிர்ச்சி தன்மைக்கு மாறி விடும். ரத்த ஓட்டம் தடைபடுவது அதற்கு காரணமாக இருக்கும்.

உடற்பயிற்சி செய்துவந்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். கைகளை கதகதப்பான இடங்களிலும் வைக்கலாம்.

விரல்களை மூடியே வைத் திருப்பதும் குளிர்த்தன்மையை விரட்ட உதவும். வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் கைகளை முக்கி வைக்கலாம்.

சூடாக டீ, காபி பருகும்போது கைகளிலும் சூடு பரவும். வெப்பத்தை தக்கவைக்கும் கையுறைகளையும் அணியலாம்.

நன்றி | மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More