நாய்கள் கடித்து பெண் பலி- உரிமையாளருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை நாய்கள் கடித்து பெண் பலி- உரிமையாளருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை

அமெரிக்காவில் நாய்கள் கடித்து பெண் உயிரிழந்த வழக்கில் அந்த நாய்களின் உரிமையாளருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தெற்கு கலிபோர்னியாவின் லிட்டில்ராக் பகுதியைச் சேர்ந்த வர் அலெக்ஸ் டோனால்டு ஜாக்சன் (31). அவர் தனது வீட்டில் நான்கு நாய்களை வளர்த்து வந்தார்.

கடந்த ஆண்டு மே 9-ம் தேதி அப்பகுதி வழியாகச் சென்ற பமீலாவை (63), ஜாக்சன் வளர்த்த நான்கு நாய்களும் கடித்து குதறின. இதில் அவர் உயிரிழந்தார்.

லாஸ் ஏஞ்சலீஸ் நகர நீதி மன்றத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

“தனது நாய்கள் தெருவில் நடந்து செல்பவர்களை கடிக்கிறது என்பது தெரிந்திருந்தும் ஜாக்சன் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதி தெரிவித்தார்.

எச்சரிக்கை

அமெரிக்காவில் சுமார் 7 கோடி நாய்கள் உள்ளன. ஆண்டுதோறும் நாய்க்கடியால் 30 பேர் உயிரிழக்கின்றனர். இந்நிலையில் லாஸ் ஏஞ்சலீஸ் நகர நீதிமன்றத்தின் தீர்ப்பு நாய்களை வளர்ப்போருக்கு ஓர் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

ஆசிரியர்