அழுகையும்.. கதறலுமாய் பதவிப்பிரமாணம் எடுத்த அமைச்சர்கள்!அழுகையும்.. கதறலுமாய் பதவிப்பிரமாணம் எடுத்த அமைச்சர்கள்!

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக நேற்று கண்ணீர் மல்க பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் மாளிகையில் பிற்பகலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரோசையா, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சர்களாக பதவியேற்கும் போது மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் இம்முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா சிறைக்கு சென்றதை அடுத்து கண்ணீரும் கதறலுமாய் பதவியேற்பு நிகழ்ந்தது.

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்த்தைதொடர்ந்து,

வைத்தியலிங்கம். பதவி பிரமாணம் வாசித்தபோது விசும்பல் சத்தம்தான் அதிகம் கேட்டது.

நத்தம் விஸ்வநாதன், மோகன், வளர்மதி,எடப்பாடி பழனிச்சாமி, செந்தில் பாலாஜி, சம்பத், செல்லூராஜ், காமராஜ், தங்கமணி உள்ளிட்ட பல மீண்டும் அமைச்சர்களாக கண்ணீர் மல்க கதறி அழுதபடி பதவியேற்றனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி. அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்தபோது அவரது குரல் உடைந்து கம்மியது. கண்ணீர் வழிந்தோடியது. ஒருவழியாக பதவிப்பிரமாணத்தை வாசித்து முடித்தார்.பா.வளர்மதி நேற்று

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றார். அப்போது கண்ணீர் மல்க பதவியேற்ற அவர், பதவிபிரமாணத்தை முடிக்கும் முன்பாகவே கதறி அழுதுவிட்டார்.

இதேபோல மற்ற அமைக்சர்களும் க்ண்ணீர் மல்க பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்,இதுவரை தமிழக அமைச்சர் கள்பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக க்ண்ணீருடன் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர். இதற்கு முன் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகபதவியேற்ற போது கூட அமைச்சர்கள்யாரும் அழுததில்லை என்பது குறிபிடத்தக்கது

 

ஆசிரியர்