98 வயதில் உலகின் மூத்த கோமாளி கலைஞன் மறைவு 98 வயதில் உலகின் மூத்த கோமாளி கலைஞன் மறைவு

உலகிலேயே பழமையான கோமாளி வேஷம் போடும் நபரான கிரீக்கி தனது 98 வயதில் மரணம் அடைந்தார். அமெரிக்காவில் உள்ள மோண்டானா மாநிலத்தில் வசித்து வந்தவர் கிரீக்மோர்.

இவர் 1916-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ந்தேதி பிறந்தவர். கிரீக்கி தனது 10-வயது முதல் கோமாளி வேஷம் அணிந்து குழந்தைகள் உள்பட அனைவரையும் சந்தோஷப்படுத்தி வந்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு உலகிலேயே மிக அதிக வயதுடைய கோமாளி கலைஞன் என்ற கின்னஸ் சாதனை படைத்தார். அவரது மனைவி அதே ஆண்டில் மரணம் அடைந்தார். அதன்பின் கோமாளி வேஷம் அணிவதை தவிர்த்தார்.

இந்நிலையில், இதய நோயால் அவதிப்பட்டு வந்த அவர், பில்லிங்சில் உள்ள தனது வீட்டில் சனிக்கிழமை இரவு காலமானார். இத்தகவலை அவரது மகன் டேவ் கிரீக்மோர் தெரிவித்தார்.

ஆசிரியர்