May 31, 2023 4:49 pm

காய்கறி மற்றும் விலங்கு கொழுப்பில் தயாரிக்கப்பட்ட ‘கிரீன் டீசல்’ மூலம் விமானம் பறக்க வைத்து சாதனை காய்கறி மற்றும் விலங்கு கொழுப்பில் தயாரிக்கப்பட்ட ‘கிரீன் டீசல்’ மூலம் விமானம் பறக்க வைத்து சாதனை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

காய்கறி மற்றும் விலங்கு கொழுப்பில் தயாரிக்கப்பட்ட ‘கிரீன் டீசல்’ மூலம் விமானம் பறக்க வைத்து சாதனை படைக்கப்பட்டது.

விமானங்கள் பெட்ரோல் மூலம் இயக்கப்படுகின்றன. அதற்கு மாற்றாக இயற்கை எரிபொருள் மூலம் இயக்க நிபுணர்கள் புதுவித யுத்தியை கண்டுபிடிக்க ஆய்வு மேற்கொண்டனர்.

அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் இம்முயற்சியை மேற்கொண்டது. காய்கறிகள் மூலம் பெறப்படும் எண்ணை, சமையல் கழிவு எண்ணை மற்றும் விலங்குகளின் கொழுப்பு ஆகியவற்றில் இருந்து ‘கிரீன் டீசல்’ என்ற இயற்கை எரிபொருள் உருவாக்கியுள்ளனர்.

15 சதவீத கிரீன் டீசலை 85 சதவீத வழக்கமான விமான பெட்ரோலுடன் கலந்து புதிய எரிபொருள் கலவை தயாரித்தனர். அதை ‘எகோ டெமான்ஸ்ட்ரேட்டர் 787’ ரக விமானத்தில் ஊற்றி சோதனை செய்தனர்.

அதில் அந்த விமானம் வெற்றிகரமாக பறந்தது. அதை தொடர்ந்து இச்சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்