June 8, 2023 5:04 am

அமெரிக்காவில் வீட்டின் மேல் விமானம் விழுந்து 6 பேர் பலிஅமெரிக்காவில் வீட்டின் மேல் விமானம் விழுந்து 6 பேர் பலி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அமெரிக்காவில் வீட்டின் மேல் சிறிய வகை விமானம் விழுந்து நொறுங்கியதில், வீட்டுக்குள் இருந்த மூவரும், விமானத்தில் பயணம் செய்த மூவரும் உயிரிழந்தனர்.

அந்த நாட்டின் மேரிலாண்ட் மாகாணத்திலுள்ள, வாஷிங்டன் புறநகர் பகுதியான கெய்தர்ஸ்பர்கில் இந்த விபத்து திங்கள்கிழமை நேரிட்டது.

இந்த விபத்தில், இரண்டு மாடிகளைக் கொண்ட மரத்தாலான அந்த வீட்டின் மேல்தளம் வெடித்துச் சிதறியது.

மேலும், வீட்டின் பெரும்பாலான பகுதி எரிந்து சாம்பலானது.

விபத்தைத் தொடர்ந்து, விமானத்திலிருந்த மூவரும் உயிரிழந்ததாக அறிவித்த அதிகாரிகள், வீட்டிலிருந்த மேரி கெம்மல் (36), அவரது மகன்கள் கோல் (3), டெவன் (1 மாதம்) ஆகிய மூவரையும் பல மணி நேரம் தேடி வந்தனர்.

இறுதியில், மூவரும் உயிரிழந்த நிலையில் வீட்டின் இரண்டாவது மாடியியிலுள்ள குளியறையில் கண்டறியப்பட்டனர்.

இரு குழந்தைகளையும் புகையிலிருந்து பாதுகாப்பதற்காக, அவர்களை அணைத்தபடி மேரி உயிரிழந்திருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

மேரியின் கணவரும், மகளும் விபத்தின்போது வீட்டில் இல்லாததால் உயிர் தப்பியதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்