அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் ஒபாமா பிரசாரம் செய்து வருகிறார். அமெரிக்க அதிபர் பதவிக்கு ஹிலாரியை விட தகுதியானவர் யாரும் இல்லை என ஒபாமா தனது பிரசார பேச்சுக்களில் கூறி வருகிறார்.ஹிலாரி அமெரிக்காவின் அதிபரானால் அமெரிக்கா மிகப் பெரிய நாடாக திகழும். எதிர்காலத்தில் அமெரிக்கா மிக உயர்ந்த நிலையை அடையும் என்ற நம்பிக்கை உள்ளது என ஒபாமா தனது பிரசாரங்களில் பேசி உள்ளார்.
ஹிலாரிக்கு ஆதரவாக ஒபாமா பிரசாரத்தில் இறங்கி உள்ளதை எப்பிஐ இயக்குனர் ஜேம்ஸ் கோமி கடுமையாக விமர்சித்துள்ளார். ஹிலாரிக்கு ஆதரவாக ஒபாமா பிரசாரத்தில் இறங்கிய பிறகு, ஹிலாரி மீதான இமெயில் முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணையின் வேகம் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஹிலாரியோ அல்லது அவரது சகாக்களோ சட்டங்களை மீறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதே சமயம் அவர்கள் முக்கிய தகவல்களை கவனக்குறைவாக கையாண்டதற்கான ஆதாரங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார்.