சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போன் பேட்டரிகள் திடீரென தீப்பிடித்ததன் காரணமாக பல்வேறு நாடுகளிலும் இந்த போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது அமெரிக்க விமானங்களில் பயணிகளோ, விமான பணியாளர்களோ சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் அமெரிக்காவில் இருந்து செல்லும் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகளிடம் தீவிர சோதனை செய்யப்படுகிறது. தடையை மீறி போன்களை எடுத்துச் சென்றால், பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமானம் ஒன்றில் இம்மாத துவக்கத்தில் கொண்டு செல்லப்பட்ட நோட் 7 போன்களில் உஷ்ணம் அதிகமாகி, தீப்பொறிகள் கிளம்பியதை அடுத்து இந்த தடை கொண்டு வரப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த தடை
0