பெரு நாட்டில் அபாயகரமான வளைவை கடக்கும் போது, 262 அடி உயரத்தில் இருந்து பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 48 பேர் உயிரிழந்தனர்.
இதில் உயிர் தப்பிய ஆறு பேர் சிதைவுகளில் இருந்து மீடக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தலைநகர் லிமாவில் இருந்து 55 பயணிகளுடன் பசமயோ நகருக்கு பயணித்துக்கொண்டிருந்த பஸ் வண்டி பனிமூட்டத்திற்கு மத்தியில் ஒரு மோசமான வளைவை கடக்க முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக வீதியில் கவிழ்ந்த பஸ், 262 அடி உயரத்தில் இருந்து கடற்கரை பாறைகளில் விழுந்து நொறுங்கியுள்ளது.
விபத்து நடந்த கடற்கரைக்கு செல்ல வீதிகள் இல்லாததால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஹெலிகொப்டர்கள் மூலம் உயிரிழந்தவர்களின் உடல்களை பொலிஸார்் மீட்டுள்ளனர்.
பசுபிக் பெருங்கடல் வீதியில் இருக்கும் இந்த வளைவுப்பாதை பெரு நாட்டில் மிக ஆபத்தான வளைவு என கருதப்படுகிறது.