0
பெங்களூரிலிருந்து சடடவிரோதமான முறையில் வங்கதேசம் செல்ல முயன்ற 31 வங்கதேசிகள் அசாம் தலைநகர் கவுகாத்தியில் கடந்த அக்டோபர் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூர் விரைவு ரயில் மூலம் கவுகாத்தி சென்ற அந்த வங்கதேசிகள், அகர்தலா செல்ல கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலுக்கு காத்திருந்த போதே இவர்களை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் பெங்களூரில் கூலிகளாகவும் கட்டிட வேலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். “திரிபுரா வழியாக மீண்டும் தாய் நாட்டுக்குச் செல்ல இவர்கள் நினைத்திருக்கின்றனர். இவர்களில் 10 ஆண்களும், 8 பெண்களும், 13 குழந்தைகளுமாக 31 வங்கதேசிகளும் நீதிமன்ற காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களை முறையான வழியில் நாடுகடத்துவதற்கான முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் நிலவும் வறுமை நிலையே, தொடர்ச்சியாக இந்தியாவுக்குள் வங்கதேசிகள் நுழைய காரணம் என்று தெரிய வருகின்றது.