0
உலகின் மிக நீண்ட கடல்வழிப் பாலம், சீனாவின் சுஹய் பகுதியில் இன்று அந்நாட்டு ஜனாதிபதி ஸி ஜின்பிங்க் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்துள்ளார்.
சுமார் 9 வருட கால உழைப்பில் உருவாக்கப்பட்ட இந்தப் பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்காக 20 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த இந்தப் பாலம், வழமையான போக்குவரத்துக்காக நாளை திறந்துவைக்கப்படும் எனது தெரிவிக்கப்படுகின்றது.
ஹொங்கொங்கிலிருந்து சீனாவிற்கு கடல் மார்க்கமாக செல்லக்கூடிய இந்தப்பாலம் 55 கி.மீ. நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது.