கேள்வி: உங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் அணியில் உள்ளதாக எதிர்த்தரப்பினர் கூறுகின்றனரே..
ரணில் விக்ரமசிங்க: நாம் கலந்துரையாடலில் இருக்கும் போது அதிகளவிலான தொலைபேசி அழைப்புக்கள் கிடைத்தன. 150 மில்லியன் ரூபா தருகின்றோம் எமது தரப்பிற்கு வாருங்கள் என தொலைபேசி அழைப்புக்கள் கிடைத்துள்ளன. எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அதன்போது 250 மில்லியன் கோரி, பின்னர் சிரித்துக்கொண்டு 400 மில்லியனை கேட்டுள்ளார்.
கேள்வி: யார் அவ்வாறு கோரியது?
ரணில் விக்ரமசிங்க: ஜனாதிபதி தரப்பின் பல்வேறு குழுக்களே அவ்வாறு கோரியுள்ளனர். எந்த அமைச்சு தேவை என கேட்கின்றனர். அவர்களிடம் அவ்வளவு பணம் இருப்பதாக நான் நினைக்கின்றேன். பாராளுமன்றத்தைக் கூட்டும் போது பெரும்பான்மையைப் பார்ப்போம். அவ்வாறு செய்தால், யார் அவர்களைக் கோருகின்றார்கள் என்பதனைப் பார்க்க முடியும். அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பின்னால் செல்ல வேண்டிய அவசியம் இல்லையல்லவா?
ஜனநாயகத்தின் பின்னால் சர்வதேச சமூகம் உள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்தார்.
பாராளுமன்ற பெரும்பான்மையை பரிசீலிக்க அதில் நான் தோல்வியடையும் வரையும் அல்லது மீண்டும் தேர்தலுக்கு செல்லும் வரையும் நானே நாட்டின் பிரதமர் அவ்வாறு இடம்பெறவில்லைஎன்றால், கொள்கை ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் பிரச்சினை இல்லை ஜனநாயகத்தை விமர்சிப்பதா எமக்கு தேவைப்படுகிறது? சில நாடுகள் அதற்கு மேலாக சென்றுள்ளன.
அரசியலமைப்பு செயற்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். இந்தியா தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக நான் நினைக்கின்றேன். உலகில் பல்வேறு நாடுகள் இவ்வாறான விடயங்கள் ஊடக பதில் தேடியுள்ளன. பாராளுமண்டத்தில் சமர்ப்பித்து பரும்பானமையின் அடிப்படையில் அதனைத் தீர்மானிக்க வேண்டும்.
ஜனநாயகத்தின் பின்னால் சர்வதேச சமூகம் உள்ளது. சீன தூதுவர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு என்ன கூறினார் என்பது எனக்குத் தெரியாது. சீனாவின் தூதுவர் இங்கு வந்தார். தகவல்கள் தேவை என அவர் என்னிடம் கூறினார். மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து தகவல்களைக் கெடடறிந்து கொண்டதாக அவர் என்னிடம் தெரிவித்தார். இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பதனை அறிந்துகொள்ளும் தேவை சீனாவிற்கு உள்ளது. இங்கு சீனாவின் அளித்தல் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
நன்றி News 1st இணையம்