நாளை காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடும் என சபாநாயகரின் ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் உத்தரவை உயர் நீதிமன்றம் இடைநிறுத்தி வைக்க கட்டளையிட்டதைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 4 ஆம் திகதி ஜனாதிபதி விடுத்த 2095/50 இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பாராளுமன்றம் கூடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக நாளை காலை 8.30 அளவில் அனைத்து கட்சிகளின் தலைவர்களின் விசேட கூட்டம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.