செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மலேசியாவில் 41,018 சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவில் 41,018 சட்டவிரோத குடியேறிகள் கைது

1 minutes read

மலேசியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியும் பணியாற்றியும் வந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 41,018 பேரை அந்நாட்டின் குடிவரவுத்துறை சிறைப்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 2018 முதல் இன்றைய தேதி வரையிலான 10 மாத காலத்தில் நடந்த 12,659 தேடுதல் வேட்டைகளில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலேசியா எங்கும் 165,490 இடங்களில் இச்சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 13,614 இந்தோனேசியர்கள், 8,748 வங்கதேசிகள், 4,068 மியன்மார் நாட்டினர், 3,549 பிலிப்பைன்சை சேர்ந்தவர்கள், தாய்லாந்தின் 2,791 பேர் மற்றும் இன்னும் பிற நாடுகளைச் சேர்ந்த 8,248 பேரும் சிறப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு முதல் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சிறைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மலேசிய அரசு, பதிவுசெய்யப்படாத தொழிலாளர்கள் மீது நாடுகடத்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

பொருளாதார ரீதியாகப் பின் தங்கியுள்ள அருகாமை நாடுகளைக் குறிவைக்கும் மலேசிய நிறுவனங்கள், ஆட்கடத்தல்காரர்கள் வழியாக அப்பகுதியிலிருந்து ஆட்களை அழைத்து வருகின்றனர்.

இவர்கள் கட்டுமானத்துறை, தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் குறைந்த ஊதியத்திற்கு ஆபத்தான கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். லாபத்தை மட்டுமே மையமாகக் கொண்ட நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துபவர்கள் இவர்களை எந்தவித ஆவணங்களுமின்றிப் பணியில் வைத்துள்ளனர்.

அந்த குறைந்த ஊதியத்தைக் கூட அளிக்காமல் பெரும்பாலான தொழிலாளர்கள் துரத்தப்படும் அவலங்கள் நிகழ்வதும் இச்சிக்கலின் அங்கமாக பார்க்கலாம்.

சமீபத்தில், மலேசியாவுக்கு வேலைக்குச் சென்ற திருநெல்வேலியைச் சேர்ந்த 48 தமிழக தொழிலாளர்கள் மோசமான வேலைச்சூழலில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More