செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் எந்தக் கட்சிக்கும் சார்பாக செயற்படப்போவதில்லை – சி.வி

எந்தக் கட்சிக்கும் சார்பாக செயற்படப்போவதில்லை – சி.வி

1 minutes read

யாழ் பலாலியிலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எந்தக் கட்சிக்கும் சார்பாக செயற்படாமல் புதிய பொதுச்சின்னத்தில், தமிழ் மக்கள் கூட்டணி தேர்தலைச் சந்திக்கும் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வெளியேயுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைத் தவிர்ந்த மற்றைய தமிழ் கட்சிகள் அனைத்தையும் தம்முடன் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஏதேனுமொரு கட்சிக்கு சார்பாக அந்த சின்னத்தில் போட்டியிட்டால் ஒற்றுமைக்குக் குந்தகம் ஏற்படலாம் என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் மீண்டும் குரோதங்களையும், விரோதங்களையும் வளர்த்துக்கொண்டு முரண்பாடுகள் ஏற்பட இடமளிக்காமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை அடிப்படையில் தேர்தல் அரசியலை எதிர்கொள்வதற்கு முன்வருமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More