சீனாவின் ஹீலோங்ஜியாங் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹெகாங் என்ற நகரத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு, கர்ப்பிணியான தனது மனைவியை பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளார் ஒருவர்.

அங்கு, கூட்டம் அதிகமாக இருந்ததால் நாற்காலிகள் அனைத்தும் நிரம்பி காணப்பட்டன. வைத்தியரின்

 அழைப்புக்காக காத்திருந்தபோது, நிறைமாத கர்ப்பிணியான அவருடைய மனைவிக்கு கால் வலிக்கத் தொடங்கியுள்ளது. கர்ப்பிணி என்ற பரிதாபம் கொண்டு யாரும் எழுந்து இடம்தர முன்வரவில்லை.

தன் மனைவி மிகவும் சோர்வாக இருப்பதைக் கவனித்த அவரது கணவர், உடனே தரையில் குனிந்து அமர்ந்து தன்னை ஒரு நாற்காலிபோல் ஆக்கி தன் முதுகில் மனைவியை அமர வைத்துக் கொண்டார்.

சி.சி.டி.வி கெமராவில் பதிவான இந்தக் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.