‘என்னை நம்பியவர்களை குறிப்பாக என்னை நம்பி வந்த மக்களை நான் ஒரு போதும் கை விடுவதில்லை’ என கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் நேற்று (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
பேசாலை பகுதியில் யுத்த காலத்தின் போது அழிக்கப்பட்ட படகுகளுக்கான நட்ட ஈடுகள் எவையும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை என்ற கருத்தை மீனவ சங்க பிரதிநிதிகள் அமைச்சரிடம் முன் வைத்தனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ‘என்னை நம்பியவர்களை குறிப்பாக என்னை நம்பி வந்த மக்களை நான் ஒரு போதும் கை விடுவதில்லை’ எனவே மக்களின் பிரச்சினைகளை நான் ஆராய்ந்து நிவர்த்தி செய்வேன் என தெரிவித்தார்.
இச்சந்திப்பில் பேசாலை கிராமத்தில் உள்ள பொது அமைப்புக்கள், மீனவ அமைப்புக்கள், ஆலய பிரதிநிதிகள் மற்றும் பேசாலை பங்குத்தந்தை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.