மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவுக்கு, வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவ வீரர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரடியனாறு பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் முன்னர் பதியத்தலாவையில் படை முகாமில் கடமையாற்றியபோது கொரோனா சோதனை முகாமி ஒன்றில் பணியாற்றியதாகவும் தற்போது கரடியனாறு வைத்தியசாலைக்கு வந்துள்ள நிலையில் அங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.