இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 132ஆக அதிகரிப்பு!

இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் மேலும் 3 அதிகரிப்பு ஏற்பட்டு மொத்த எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மாலை 4 மணியளவில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மொத்த எண்ணிக்கை 129 ஆக இருந்த நிலையில் தற்போது மேலும் மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மட்டும் இலங்கையில் 10 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவளை, தற்போது 114 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வரும் நிலையில், 16 பேர் குணமடைந்துள்ளதுடன் இருவரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்