இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவுக்கு இந்திய தொழிலாளர்கள் உள்பட 17 தொழிலாளர்களை படகு மூலம் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் கடத்தலை மேற்கொண்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் ரியூ மாகாணத்தில் உள்ள Bengkalis பகுதியிலிருந்து மலேசியாவுக்கு சட்டவிரோதமாக தொழிலாளர்களை கடத்தும் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ரியூ காவல்துறை தெரிவித்துள்ளது.
“கொரோனா அச்சம் நிலவிவரும் இச்சூழலுக்கு இடையேயும், சர்வதேச தொடர்புடைய கும்பல் இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவுக்கு சட்டவிரோதமாக மக்களை கடத்தி வருகின்றது,” எனக் கூறியிருக்கிறார் ரியூ காவல்துறையின் மக்கள் தொடர்பு தலைமை அதிகாரியான பொல் சுனர்டோ.
தற்போதைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இந்தியா, மலேசியா, மற்றும் இந்தோனேசியா சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவுக்கு இந்திய தொழிலாளர்கள் உள்பட 17 தொழிலாளர்களை படகு மூலம் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் கடத்தலை மேற்கொண்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் ரியூ மாகாணத்தில் உள்ள Bengkalis பகுதியிலிருந்து மலேசியாவுக்கு சட்டவிரோதமாக தொழிலாளர்களை கடத்தும் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ரியூ காவல்துறை தெரிவித்துள்ளது.
“கொரோனா அச்சம் நிலவிவரும் இச்சூழலுக்கு இடையேயும், சர்வதேச தொடர்புடைய கும்பல் இந்தோனேசியாவிலிருந்து மலேசியாவுக்கு சட்டவிரோதமாக மக்களை கடத்தி வருகின்றது,” எனக் கூறியிருக்கிறார் ரியூ காவல்துறையின் மக்கள் தொடர்பு தலைமை அதிகாரியான பொல் சுனர்டோ.
தற்போதைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இந்தியா, மலேசியா, மற்றும் இந்தோனேசியா சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.