செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சங்கா, மஹேலவின் பாராட்டைப் பெற்ற முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவிகள்!

சங்கா, மஹேலவின் பாராட்டைப் பெற்ற முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவிகள்!

7 minutes read

யுத்தத்தின் வடுக்களை தன்னகத்தே தாங்கி, முள்ளந்தண்டு வடம் பாதிக்கபட்ட இரண்டு மாணவிகள் 2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றமை பல்வேறுத் தரப்பின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவிகளான, செல்வி பவதாரணி கெங்காதரன் மற்றும்  செல்வி விதுர்சிகா மதியழகன் ஆகியோரே இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளனைர்.

சமூக ஆர்வலர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டடவர்களின் பாராட்டுகளை பெற்ற மாணவிகள் இருவரும், இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் நட்சத்திரங்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் பாராட்டுகளை பெற்றுள்ளனர்.

Kumar Sangakkara

@KumarSanga2

Courage and determination. Proud Sri Lankan’s we are all proud of. Well done. https://twitter.com/kavinthans/status/1255151532212752384 
Kavinthan s@Kavinthans

Two students from Mullaitivu, Bawatharanani and Vidurshika, who were disabled by the war, have excelled in G.C.E. O/L. They have obtained 8 As, B and 6 As, 2Bs respectively. They got injured in 2 separate incidents during 2009. They have made this amidst hardships.#SriLanka #Lk

View image on Twitter
135 people are talking about this

இருவரும், தன்னுடைய ட்விடடர் (Twitter) தளத்தில் இரு மாணவிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

கெங்காதரன் பவதாரணி கடந்த 2009ஆம் ஆண்டு பங்குனி மாதம் மாத்தளன் பகுதியில் எறிகணைத் தாக்குதலில் தன்னுடைய தந்தையாரை பறிகொடுத்ததோடு, தானும் பாதிக்கப்பட்டார்.

இவர், கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோற்றி 8 “A“ சித்திகளையும், ஒரு “B“ சித்தியையும் பெற்றுள்ளார்.

Mahela Jayawardena

@MahelaJay

Amazing… well done 👍👏👏👏 https://twitter.com/kavinthans/status/1255151532212752384 

Kavinthan s@Kavinthans

Two students from Mullaitivu, Bawatharanani and Vidurshika, who were disabled by the war, have excelled in G.C.E. O/L. They have obtained 8 As, B and 6 As, 2Bs respectively. They got injured in 2 separate incidents during 2009. They have made this amidst hardships.#SriLanka #Lk

View image on Twitter
162 people are talking about this
அதேபோன்று மதியழகன் விதுர்சிகா நாட்டில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடைந்து மக்கள் வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஆனந்தகுமாரசுவாமி நலன்புரி நிலையத்தில் சென்று அங்கு 2009 புரட்டாதி மாதம் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மதியழகன் விதுர்சிகா முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாட்காலியில் நடமாட நிர்ப்பந்திக்கப்படடார்.

இவர் கல்வித் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6 “A“ சித்திகளையும், ஒரு “B“ சித்தியையும், 2 “C“ சித்திகளையும் பெற்றுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More