இதுவரையில் கொரோனாிவிருந்து மீண்டவர் எண்ணிக்கை 215 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் குணமடைந்தனர் என்றும் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 771 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 547 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 09 பேர் இதுவரை மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்