இலங்கையில் முழுமையாக கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது! சுகாதார துறை அறிவிப்பு

கொரோனா வைரஸ் சமூகங்களுக்கு இடையில் செல்ல விடாமல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிப்தற்கு அரசாங்கம் தீர்மானங்கள் மேற்கொண்டுள்ளது

அதற்கமைய இதுவரையில் சுகாதார அதிகாரிகளினால் சுகாதார விதிமுறைகள் குறித்து பொது மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.

குறித்த சுகாதார ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்றினால் வைரஸிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நாடுகள் முன்னோக்கி செல்ல முடியாதென்பதனால் சிறிது சிறிதாக நாட்டின் அன்றாட நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொண்டு நாட்டின் வழமையான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். இங்கு முழுமையான நாட்டு மக்களும் தங்களின் பொறுப்பினை உணர்ந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்