நீதியை கோரும் தமிழர்களுக்கு எனது முழு ஆதரவு! கனேடிய முன்னாள் அமைச்சர்

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கான நீதியை தமிழ்கள் கோரி நிற்பதாகவும் அவர்களுக்கான தனது ஆதரவு தொடரும் எனவும் முன்னாள் கனேடிய அமைச்சர் பீட்டர் கோர்டன் மக்கே (Peter Gordon MacKay )தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள காணொளியில் அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கனடா உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இலங்கையின் முள்ளிவாய்க்காலில் நடந்த இன அழிப்பு நினைவு தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் சவாலுக்கு மத்தியில் அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு தமிழ் மக்கள் நீதி கோரி நிற்கின்றனர். 2009ம் ஆண்டு தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தினால் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

அந்த இனப்படுகொலை இடம்பெற்று 11 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இலங்கையிலும் உலகிலும் வாழும் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்காக நியாயத்தை கோருகின்றனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்தும். காணாமல் ஆகியும் ஒரு தாசப்தம் கடந்துள்ளது.

பல வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறும் மற்றும் நீதி வழங்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியை கனேடிய தமிழர்கள் கோருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் கனேடிய தமிழர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் இணைந்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைவதுடன் அவர்களுக்கு தொடர்ந்தும் எனது ஆதரவை வழங்குவேன்.

அத்துடன் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புகூறல்களுக்காக தொடர்ந்தும் வலியுறுத்துவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்