March 26, 2023 11:06 pm

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்றதுதான் சரி: பொன்சேகா

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் பிடிபட்டிருந்தால் இன்று வடக்கு – கிழக்கில் பெரிய அரசியல் சக்தியாக இருந்திருப்பார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரபாகரன் கொல்லப்பட்டதை தான் சரியென கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“ஒரு சிறந்த தலைவர் என்ற வகையில் பிரபாகரன் மீது மரியாதை உள்ளது. எனினும், அவரை உயிருடன் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் இருக்கவில்லை.

அவ்வாறு அவரை உயிருடன் பிடித்திருந்தால் இன்று அவரும் அரசியலில் ஈடுபட்டிருந்திருப்பார். அரசியலில் ஈடுபட்டிருந்தால் இன்று அவர் அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார்.

இதனால் அரசியல் ரீதியில் வடக்கு – கிழக்கு அவரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கும். ஆகையினால் பிரபாகரன் கொல்லப்பட்டதை தான் சரியென கருதுகின்றேன்.

மேற்கத்திய நாடுகள் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த போதிலும், இந்தியா இதில் மாற்று நிலைப்பாட்டில் இருந்தது.

இந்தியாவும் யுத்தத்தில் பாதிக்கப்பட்டது, அந்நாட்டு பிரதமரும் கொல்லப்பட்டார். அத்துடன், இந்தியா கூறியதை விடுதலைப்புலிகள் கேட்கவும் இல்லை.

ஆகவே இந்தியா யுத்த நிறுத்த விடயங்களில் தலையிடவில்லை. பாகிஸ்தானும் சீனாவும் எமக்கு உதவிகளை செய்தன.

இந்நிலையில், சில நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் என்னுடன் நேரடியாக பேசி சமாதான பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்தினர்.

எவ்வாறாயினும், யுத்தத்தை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் இருந்தோம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்