யாழ். அளவெட்டிப் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை வேளை திடீரென பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்த இராணுவம் வீடுகளை முழுமையாக சோதனை செய்துள்ளது.
இது தொடர்பில் பிரதேசவாசி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், சோதனை நடவடிக்கைகளுக்காக 05 இராணுவத்தினரும் ஒரு பொலிஸாரும் வந்தனர்.
கொரோனா அச்சம் காரணமாகவே வீடுகளை சோதனையிடுவதாக கூறி தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் பதிவு செய்தார்கள்.
வீடுகளில் யாராவது மறைந்துள்ளார்களா? என்று பார்ப்பது போலவே அவர்களது சோதனைகள் இருந்தது. குளிர்சாதனப்பெட்டி உட்பட வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் சோதனை செய்தார்களென அவர் தெரிவித்தள்ளார்.
இவ்வாறான திடீர் சோதனைகள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.