அத்தனகலு ஓயாவில் நீராடச் சென்ற 20 வயது யுவதி ‘செல்பி’ எடுக்க முயன்ற போது நீரில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்று நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, புறக்கோட்டை – குணசிங்கபுர தொடர்மாடி குடியிருப்பு வசித்து வந்த பாத்திமா பஸ்னா என்பவரே இன்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி புறக்கோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் தொண்டராசிரியராகப் பணிபுரிந்தவர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த யுவதியுடன் மேலும் 7 பேர் நீராடச் சென்றிருந்தனர் என்றும், அதன்போது அவர் ‘செல்பி’ எடுக்க முயன்ற போது பாறையிலிருந்து விழுந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தனக்கு நீச்சல் தெரியாது என்று அவர் கூச்சலிட்டார் என்றும், அதனைத் தொடர்ந்து அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டார் என்றும் பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. (02)